அஜீத்தால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு !! அவரது வாழ்கையையே புரட்டிபோட்டது!!

thala ajith gives chance to vikram: திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம் ஆவார். இவர் தற்பொழுது 2019ஆம் ஆண்டில் கமலஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் செல்வா அவர்கள் இயக்கத்தில்  திரையுலகிற்கு வெளிவந்த படம் கடாரம் கொண்டன்  இப்படம் ஓரளவுக்கு சுமாராக ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் அதிகப்படியான ஆக்சன் கதை உள்ளடக்கியுள்ளது.

விக்ரமுக்கு விஜய் உடன் எப்படி நல்ல நட்பு இருக்கிறதோ அதே போலவே அஜித்துடன் இவருக்கு நல்ல நட்பு இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து அஜித்துக்கு முதலில் இவர்தான் டப்பிங் பேசி வந்தாராம். அதிலிருந்தே இருவரும் நண்பர் ஆகி விட்டார்களாம். இந்த நட்பின் தொடர்பாகவே இருவரும் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்து வலம் வந்தார்கள்.

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் தமிழ் திரை உலகிற்கு வெளிவந்த படம் ஜெமினி ஆகும். இப்படத்தில் கீரன் அவர்கள் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதில் பரத்வாஜ் இசை அமைத்திருப்பார் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.

ஆனால் இந்த படம் முதல் முதலில் அஜித் நடிப்பதாக தான் ஒப்பந்தமாகி இருந்ததாம். ஒரு சில பிரச்சினைகளினால் இந்த படத்தில் இவரால் நடிக்க  முடியாமல் போய்விட்டதாம் எனவே விக்ரம் அவர்கள் நடித்தாராம்.

 

 

Leave a Comment