பிக்பாஸ் ஷெரினை உனக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா!! என விளாசிய ரசிகர்கள்.

Bigg boss Sherin don’t you feel guilty: தமிழ் திரையுலகில் ஷெரின் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் நடித்து வந்தார். பின்பு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் சினிமா துறையில் இருந்து வெளியேறி சில காலம் ஆளே அட்ரஸ் இல்லாமல் இருந்தார்.

மேலும் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இவர் தர்ஷன் என்பவர் மீது காதல் கொண்டு அவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். மேலும் தர்ஷனுக்கும் இவருக்கும் வயதில் வேறுபாடு அதிகம் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தர்ஷனை காதலிப்பதாக சொல்லி கொண்டு திரிந்தார் என்பதை அனைவரும் அறிந்ததே.

மேலும் தர்ஷனை பார்க்கும் போதெல்லாம் தனக்குள் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதை அவ்வப்போது வனிதாவிடம் கூறிவந்தார். ஆனால் வனிதா ஒரு கட்டத்தில் தர்சனுக்கு ஏற்கனவே ஒரு காதல் இருப்பது தெரிந்து கண்டித்து வந்தார்.

பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த பின்னர் தர்ஷன்க்கும் சனம் ஷெட்டிக்கும் இடையேயான காதல் முறிந்தது. எனவே இவர்களின் காதல் முறிவுக்கு ஷெரின் தான் காரணம் என அனைவராலும் கூறப்பட்டு வந்தது.

மேலும் இதனை எதையும் கண்டுகொள்ளாத ஷெரின் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துகொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா என கேட்கிறார்கள்.

sherin
sherin
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment