ஊரடங்கும் முடிந்ததும் தான் என்ன செய்ய போகிறார் என்பதை வீடியோவாக வெளியிட்ட ரஜினி பட நடிகை.!!

huma-qureshi_tamil360newz

Rajini movie actress released video of what she is going to do when the curtain is over. !!உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினாள் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடிகளில் புரளும் திரை துறையும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. திரைத் துறையில் வேலை பார்க்கும் தினக் கூலிகள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். பசி பட்டினியால் மக்கள் வாடி வருகின்றனர்.

திரைப் பிரபலங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஹீமா குரோஷி குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தமிழ் திரை உலகிற்கு  காலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஹீமா குரோஷி இந்த ஊரடங்கு எப்போது முடியும் என காத்திருப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹீமா குரோஷி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வீடியோவின் கீழ் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததும் தான் இப்படித்தான் நடனம் ஆடுவேன் எனக்கூறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

இணையத்தளத்தில் வைரலாகும் எமி ஜாக்சன் வீடியோ.!! அவரின் செயலை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.

Amy-jackson-tamil360newz

Amy Jackson video goes viral on the internet:எமி ஜாக்சன் இவர் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2010ல் அறிமுகமானார். இவர் 2008ல் மிஸ் டீன் வேர்ல்ட்-இல் முதல் பரிசு பெற்றார். பின்னர் அதனைத் தொடர்ந்து 2010 மிஸ் டீன் லிவர்பூல் விருதையும் பெற்றார்.

எமி ஜாக்சன் முதல் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தனர். எனவே இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது. இவர் தாண்டவம், தங்க மகன், ஐ, தெறி, 2.0  போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் எமிஜாக்சன் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வருவார்.

கொரோனா வைரஸினால் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர் நடிகைகள் தான் அன்றாடம் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் எமி ஜாக்சனும்  தான் தினமும் வீட்டில் செய்யும் அன்றாட வேலையை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் சில ஹெல்த் டிப்ஸ் கொடுத்துள்ளார்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

 

சிகரெட்டால் லெமனை இரண்டு துண்டுகளாக வெட்டும் தல, தளபதி வில்லன்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

vidyuthjammwaal-tamil360newz

ajith,vijay movie villain, cutting Lemon in two pieces with cigarette video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் தல அஜித்தின் பில்லா 2, விஜயின் துப்பாக்கி மற்றும் சூர்யாவின் அஞ்சான் போன்ற திரைப்படங்களில் நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர்,  நடிகைகள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது ஒர்க்கவுட் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு அதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஈர்த்துள்ளார்.

மேலும் இவர் தனது சமையலறையில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு நிமிட வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு எரியும் சிகரெட்டை கொண்டு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி காட்டியுள்ளார். மேலும் எந்த ஒரு சிறு பொருளையும் பயனுள்ளதாக எளிதாக உபயோகிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்ற குறிப்பு மலையேற்றம், பயணம் போன்ற செயல்பாடுகளில்  ஈடுபடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

over build up-னால் படும் தோல்வியை சந்தித்த முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

ajith-tamil360newz

leading actors movie which flap: தமிழ் திரையுலகில் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு …

Read more

பாராட்டுகளை வாங்கிக் குவிக்கும் தமிழக பேருந்து நடத்துனர்.!! வைரலாகும் வீடியோ.

conductor kovai-tamil360newz

tamilnadu covai bus conductor doing good for passengers: இன்று தமிழகத்தில் கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனர் செய்த செயல் வீடியோவாக இணைதளத்தில் வைரலாகியதன் மூலம் பாராட்டுகளை வாங்கிக் குவிக்கிறார்.பேருந்து எடுப்பதற்கு முன் பயணிகளிடம் அவர் பேசியது.

“பேருந்தில் பயணம் செய்யும் நாம் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், தமிழக அரசு புதிய பேருந்துகளை பயணிகளை நம்பியும் பயணிகளின் போக்குவரத்துக்காகவும் கொடுத்துள்ளனர். மேலும் தொலை தூரம் போகும் பயணிகளுக்கு ஏதும் சிரமம் ஏற்பட்டால் உடனே தெரிவித்தால் பேருந்தை நிறுத்த வேண்டுமென்றால் தாராளமாக நிறுத்துகிறோம். மேலும் அது மட்டுமல்லாமல் பயணம் செய்யும் ஊரின் கட்டணத்தையும் தெளிவாக சொல்கிறாராம்.”

மேலும் உங்களது பயணம் சரியாக விதத்தில் அமைய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் ஆகிய எங்களுடைய வாழ்த்துக்கள் என்று மக்களிடம் பேசினார். இவர் செய்த இந்தக் காரியம் இப்படி ஒரு நடத்துனரா என பாராட்டும் விதத்தில் அமைந்தது.

தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனைப் பார்த்த பல்வேறு துறையினறும் நடத்துனரின் இந்த செயலை கண்டு ட்விட்டரில் பாராட்டிய  வண்ணம் உள்ளனர். தற்போது திமுக கட்சியின் எம்எல்ஏ பதவியில் இருக்கும் டிஆர்பி ராஜா அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் டிரைவர் சதாசிவம் மற்றும் கண்டக்டர் சண்முகத்தை பாராட்டி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.