ரீமேக்கில் வெளியாகும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பாக்யராஜின் முந்தானை முடிச்சு.!! படக்குழுவினர் அறிவிப்பு.

The blockbuster hit in the bhagyaraj movie mundanai mudichu remake: தமிழ் திரையுலகில் 1983 ல் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இத்திரைப்படத்தில் நடிகர் பாக்கியராஜ் மற்றும் இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் 100 நாட்களை கடந்து ஒரு பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமாக உருப்பெற்றது என்பதை அனைவரும் அறிந்ததே.

முந்தானை முடிச்சு திரைப்படத்தை கே பாக்யராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும்  இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்திருந்தனர். இந்த திரைப்படத்தை தற்போது ரீமேக் செய்ய உள்ளனர்.நாடோடிகள் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசிகுமார் அவர்கள் முந்தானைமுடிச்சு திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பாக்யராஜ் அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை இந்த தலைமுறைக்கு ஏற்றவர் போல் எழுத உள்ளார். அதே போன்ற ஒத்த கதை உடைய படமாக எடுக்க உள்ளதாகவும் சிலவற்றை இந்த காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த திரைப்படத்தை ஜே எஸ் பி ஸ்டுடியோ பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும். மேலும் இதில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள், மற்ற கதாபாத்திரங்கள்  போன்றவற்றை பற்றி இன்னும் இறுதி கட்ட முடிவு எடுக்கவில்லை என்றும் இதற்கான முழுமையான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் ரீமேக்குக்காக ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படம் ரீமேக் செய்து வெளியிடப்பட்டால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் கூறிவருகின்றனர்.

Leave a Comment