ஊரடங்கும் முடிந்ததும் தான் என்ன செய்ய போகிறார் என்பதை வீடியோவாக வெளியிட்ட ரஜினி பட நடிகை.!!

0

Rajini movie actress released video of what she is going to do when the curtain is over. !!உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினாள் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோடிகளில் புரளும் திரை துறையும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. திரைத் துறையில் வேலை பார்க்கும் தினக் கூலிகள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். பசி பட்டினியால் மக்கள் வாடி வருகின்றனர்.

திரைப் பிரபலங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஹீமா குரோஷி குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தமிழ் திரை உலகிற்கு  காலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஹீமா குரோஷி இந்த ஊரடங்கு எப்போது முடியும் என காத்திருப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஹீமா குரோஷி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வீடியோவின் கீழ் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததும் தான் இப்படித்தான் நடனம் ஆடுவேன் எனக்கூறி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.