2 மாத ஊரடங்கில் 11 கதைகளை எழுதிய இயக்குனர் மிஸ்கின்.!!

Director Mysskin, who wrote 11 stories in a 2-month curfew: கொரோனா வைரசினால் வீட்டிலேயே முடங்கி உள்ள சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்கள் என அனைவரும் ஊரடங்கில் போரடிக்காமல் இருப்பதற்காக ஏதேனும் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சிலர் தனது அன்றாட வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள் என்பதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஃபிட்னஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில்  பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மிஸ்கின் அவர்கள்  இந்த இரண்டு மாத கால இடைவெளியில் தான் பல புத்தகங்களை படித்ததாக கூறியுள்ளார். இயக்குனர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஒனாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ, துப்பறிவாளன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது அவர் துப்பறிவாளன் 2 இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். மேலும் விஷாலுக்கும்  இவருக்கும் இடையே  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஸ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது துப்பறிவாளன் 2வை விஷால் அவர்கள் இயக்கிவருகிறார்.

மேலும் இந்நிலையில் ஊரடங்கில் தான் 11 கதை தயார் செய்து உள்ளதாக இயக்குனர் மிஸ்கின் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இந்த ஊரடங்கில் அவர் பியானோ வாசிக்க கற்றுக் கொள்கிறாராம்.

அஞ்சாதே படத்தை பார்த்த பின்பு சிம்பு அவர்கள் மிஷ்கினை நேரில் சந்தித்து அவருடன் படம் நடிக்க விருப்பபடுவதாகதாக கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து மிஸ்கின் அவர்கள் சிம்புவிற்கு ஒரு கதை உள்ளதாக அவரிடம் கூறியுள்ளார். கதையை கேட்டு சிம்புவிற்கு பிடித்து போனதால் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு நடிப்பதாக கூறியுள்ளாராம்.

Leave a Comment