10 ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி!! பள்ளிக்கல்விக்கு கோரிக்கை வைக்கும் நடிகர் விவேக்.!!

actor vivek request to the tamilnadu goverrnment for 10th std exam: இந்தியா முழுவதும் பரவி வரும் வைரஸின் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவை, திருச்சி போன்ற 25 மாவட்டங்களுக்கு முன்பு இருந்தது விடா சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் போன்ற 12 மாவட்டங்களுக்கு முன்பு இருந்த அதே கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தற்போது நிலவிவரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடத்தப்படும் இந்த தேர்வானது மாணவர்களுக்கு மிகவும் கஷ்டத்தை கொடுக்கும் எனவும் அதுமட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர்களுக்கும் மேலும் நெருக்கடி கொடுப்பதாக இருக்கும் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். அந்த பதிவில் “பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர் தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு செய்து பரிசீலிக்கவும்.” என கூறியுள்ளார்.

https://twitter.com/Actor_Vivek/status/1262092133009244165?s=20

 

Leave a Comment