பட வாய்ப்பு இல்லாததால் நடிகை சதா, இப்படி எல்லாம் நடிக்கிறாங்களா!! வைரலாகும் வீடியோ.

Sadha-Tourch-Light-tamil360newz

Actress Sadha,acting these kind of movies, because she does not have movie opportunity:  தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. இந்த திரைப்படத்தில் வரும் போயா போ போ என்கின்ற ஒரு வசனத்தை கூறி ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டியதன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தயே உருவாக்கிக்கொண்டார்.

மேலும் இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். இவர் பிரியசகி, எதிரி, அந்நியன், உன்னாலே உன்னாலே, வர்ணஜாலம்,  திருப்பதி,  புலிவேஷம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற சினிமாக்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருவதால் இவர் மசாலா கலந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிகைகளுக்கு சில வருடம் தான் வாய்ப்புகள் இருக்கும் என அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து பின்னர் அக்கா, அண்ணி, தோழி, வில்லி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவது வழக்கம். சிலர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். ஆனால் இவரோ சமீபத்தில் டார்ச் லைட் என்ற படத்தில் நடித்த ஒரு காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

யார் இந்த நடிகை ஹன்சிகா மோத்வானி!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ. !!

Hansika-Motwani-tamil360newz

Who is this actress Hansika Motwani !! The video is viral : தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோட்வானி. இவர் இதற்கு முன் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தேசமுதுரு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் அவார்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடன இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டர். அதுமட்டுமல்லாமல் இவரின் தோற்றத்தின் காரணமாக இவரது ரசிகர்களால் இவர் சின்ன குஷ்பு என்றும் அழைக்கப்பட்டார். இவர் தற்போது மஹா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் பிற மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் வீட்டிலேயே முடங்கியுள்ள ஹன்சிகா மோத்வானி யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது யார் இந்த ஹன்சிகா என்ற தலைப்பில் தன்னைப் பற்றி ஒரு வீடியோ பதிவை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

அண்ணாமலை சீரியலில் நடித்த ஐஸ்வர்யாவா இது !! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.

aiswarya1-tamil360newz

Annamalai Serial actress aiswarya :இயக்குனர் சி.ஜே.பாஸ்கர் இயக்கி நடிகை ராதிகா தயாரித்த அண்ணாமலை  சீரியல் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா. …

Read more

நடிப்பிலிருந்து விலகியதன் காரணத்தை கூறும் நடிகை கல்யாணி!! பாராட்டும் ரசிகர்கள்.

kalyani-tamil360newz

why Actress Kalyani quits acting reason : கல்யாணி என்கின்ற பெயரில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் …

Read more

நடிகை ராய் லட்சுமியின் வீடியோ பதிவினைப் பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்.!!

Raai-Laxmi-1-tamil360newz

actress Roy Lakshmi instagram video : உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் இந்தியாவில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து  மக்கள் வெளிமாநிலங்களில் இடம்பெயர்ந்து வேலைக்கு சென்றிருந்தார்கள் தங்களது மாநிலங்களுக்கு நடந்தே வருகின்றனர். அப்படி வரும்போது இடையில் அவர்கள் பசியின் காரணமாக இறக்க நேர்படுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். மேலும் சிலர் உடல்நிலை சரியில்லாமல் இறக்கின்றனர். சிலர் இடையில் ஏற்படும் வாகன விபத்தினால் இறக்கின்றனர். இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கூலி தொழிலாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனதை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பதிவிட்ட அந்த வீடியோ பதிவினை பார்த்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பதிவில் “கடவுளே இந்த உலகத்தை காப்பாற்றுங்கள்..! இதையெல்லாம் இனி எங்களால் பார்க்க முடியாது..! உங்களால் முடிந்தவரை மக்களுக்கு உதவவும், உயிரைக் காப்பாற்றவும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள். கடினமான நேரங்கள் விரைவில் கடந்து செல்லும். நல்ல நாட்கள் வரும் என்று நம்புகிறோம், வலுவாக இருங்கள், கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்”, என்று கூறியுள்ளார்.

காலில் அடிபட்ட டிடி !! உட்கார்ந்தபடி நடனமாடிய வீடியோ !! இணையதளத்தில் வைரலாகி வருகிறது.!!

divyadarshini-tamil360newz

Video of DD dancing as she sits on her leg !! The website is going viral: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி பற்றி தெரியாதவர்களே  இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் வெள்ளித்திரை நடிகைகள் போல மிகவும் பிரபலமானவர. இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக  வலம் வந்து கொண்டிருக்கிறார். தொகுப்பாளினி டிடிக்கு சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்டது, அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்தது.

பின்னர் அதனைத் தொடர்ந்து அவரது பல கோடி ரசிகர்கள் பல நாடுகளிலிரந்து அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் டிடி வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் அதனை தொடர்ந்து தற்போது டிடி தனது இஸ்லாமிய நண்பர்களுக்கு காலில் அடிபட்டுள்ளத்தால் அமர்ந்தபடியே நடனமாடி ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் கூறி வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

அட நடிகை யாஷிகா ஆனந்தக்கு இந்தத் திறமையும் இருக்கா.!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ.!!

yashika-tamil360newz

Actress Yashika Ananda has this talent. Video on the internet: உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சல மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் தினக் கூலிகள், தொழிலாளிகள், சாலையில் வசித்து வரும் மக்கள், என அனைவரும் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய மாநில அரசு, தொழிலதிபர்கள்,  திரைப்பரபலங்கள், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் திரைப் பிரபலங்கள் அவ்வப்போது குறும்படம், பாடல் என அனைத்தையும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் பரத், சைமன் மற்றும் யாஷிகா ஆனந்த் இணைந்து “இதுவும் கடந்து போகும்” என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியுள்ளனர். இந்த பாடலை பார்த்திபன் ரவி இயக்கியுள்ளார்.  இந்தப் பாடல் பாலமுரளி பாலா இசையில் உருவாகியது. மேலும் தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

இணையதளத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஓபன் டாக் வீடியோ.!!

Aishwarya_rajesh-tamil360newz

actress Aishwarya Rajesh Open talk Video: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இனம் திருச்சியில் நடந்த TEDx மேடையில், மாணவர்களிடையே தன் வெற்றி பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் அந்த மேடையில் தனது குடும்பப் பின்னணி பற்றியும், சினிமா துறைக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது பற்றியும் கூறியுள்ளார். மேலும் இவர் முதன்முதலாக தனது பதினோராம் வகுப்பில் வருமையின் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் போது என்ன உடை அணிவது என்று கூட அவருக்கு தெரியாதாம். பல இயக்குனர்கள் அவரின் நிறத்தை பார்த்து சினிமாவில் உனக்கு நடிகையாக வாய்ப்பெல்லாம் கிடைக்காது என்று முகத்திற்கு நேராக கூறியுள்ளார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதலில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் இதனைதொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் 2010 ஆம் ஆண்டு நீ தானா அவன் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் இதனை தொடர்ந்து உயர்திரு 420, அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்,  காக்கா முட்டை, தர்மதுரை, சாமி 2, வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.