அண்ணாமலை சீரியலில் நடித்த ஐஸ்வர்யாவா இது !! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.

0
aiswarya1-tamil360newz
aiswarya1-tamil360newz

Annamalai Serial actress aiswarya :இயக்குனர் சி.ஜே.பாஸ்கர் இயக்கி நடிகை ராதிகா தயாரித்த அண்ணாமலை  சீரியல் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா. அண்ணாமலை சீரியலில் போதைக்கு அடிமையான ராதிகாவின் வளர்ப்பு மகளாக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் பிரபலமானார்.

இவர் தொடர்ந்து கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம், அகல் விளக்குகள், பந்தம், மாங்கல்யம் போன்ற பல சீரியல்களில்  நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தவர் இயக்குனர் சி. ஜே.பாஸ்கருக்கு எனவே அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்த சீரியலுக்கு பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஐஸ்வர்யா டும் டும் டும் படத்தில் ஜோதிகாவிற்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தில் சினேகாவின் தோழியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க இருந்தாராம்.

மேலும் இதனை தொடர்ந்து இவர் திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகி விட்டதாகவும். பிறகு இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டிய காரணத்தால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பின்னர் பத்து வருடங்களுக்குப் மீண்டும் துபாயிலேயே பிரபல சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் எப்எம் இல் ஆர்ஜே வாக இருந்து வருவதாக மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளார்.

aiswarya2-tamil360newz
aiswarya2-tamil360newz
AISWARYA-tamil 360newz
AISWARYA-tamil 360newz