சினிமாவில் வருவதற்கு முன் பிரபல சீரியலில் நடித்த புரோட்டா சூரி.!! என்ன சீரியல் தெரியுமா.?

Prota Suri acted in the popular serial before coming to the cinema. !! Do you know what serial: தமிழ் சினிமாவில் புரோட்டா சாப்பிட்டு பிரபலமானவர் தான் புரோட்டா சூரி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. இவர் தனது கடின உழைப்பால் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் முன்னுக்கு வந்துள்ளார்.

இவர் தற்போது பல படங்களில்  தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். புரோட்டா சூரி திரை உலகிற்கு வருவதற்கு முன் தான் பட்ட கஷ்டங்களை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஊரைவிட்டு ஓடி வந்து சினிமாவில் வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என வந்த அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை.

அதனால் மணல் லாரியில் கிளீனராக பணிபுரிந்துள்ளார். சாப்பிடுவதற்கு உணவில்லாமல் தண்ணீர் குடித்து வெறும் வயிற்றோடு தூங்கியுள்ளார். ஒருநாள் அவரது அம்மாவுக்கு இந்த செய்தி தெரிந்து அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாராம்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போதுதான் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியலில்  நாயகன் செல்வத்திற்கு நண்பனாக நடித்துள்ளாராம். அந்த சீரியலில் நடிக்கும்போது அவருக்கு தான் இவ்வளவு பெரிய பிரபலமாக மாறுவோம் என்று கூட தெரியாதாம். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

SOORI-tamil360newz
SOORI-tamil360newz
Soori 1-tamil360newz
Soori 1-tamil360newz
Soori 1-tamil360newz
Soori 1-tamil360newz

Leave a Comment