ரியல் சிங்கம்பட்டி சீமராஜா மரணம்.!! சீமராஜா திரைப்படம் உருவாக காரணம் இவர் தானா.?

The death of Real Singampatti Seemaraja. !! Is he the reason behind the movie Seemaraja?: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம்  சீமராஜா. இந்த திரைபடத்தை இயக்குனர் பொன்ராம் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைபடத்தை R.D.ராஜா தயாரித்துள்ளார்.

இந்த சீமராஜா திரைப்படம் திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டி அருகிலுள்ள சின்ன பாளையம் என்ற பகுதியில் தமிழகத்தின் மன்னராட்சி காலத்தில் முடி சூடிய ராஜாக்களில் ஒருவரும் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன் 31ஆவது ராஜாவும் ஆனா அய்யா முருகதாஸ் தீர்த்தபதி வசித்து வந்தார். இவரை தழுவி தான் இந்த சீமராஜா படம் எடுக்கப்பட்டது.

இவர்தான் சிங்கம்பட்டி ஜமீனின் கடைசி மன்னர் ஆவார். இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இவரை ஹீரோவாக நினைத்து வருகின்றனர். அங்குள்ள மக்களிடம் அவ்வளவு அன்பாகவும் பாசமாகவும் பழகி உள்ளார். இவர் சீமராஜா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

89 வயதாகிய சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் தற்போது வயது முதிர்ந்த காரணத்தினால் இயற்கை எய்தினார். இவர்தான் இந்தியாவின் கடைசி மன்னராய் தங்களுடன் வாழ்ந்து வந்தார் எனவும் அங்குள்ள மக்கள் தற்போது அவரின் இரங்களுக்கு வருந்தி வருகின்றனர். அவரது மரணம் அங்குள்ள மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

seemaraja-fame-singampatti-zamin-passes-away-tamil360newz
seemaraja-fame-singampatti-zamin-passes-away-tamil360newz

Leave a Comment