இணையதளத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஓபன் டாக் வீடியோ.!!

0

actress Aishwarya Rajesh Open talk Video: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இனம் திருச்சியில் நடந்த TEDx மேடையில், மாணவர்களிடையே தன் வெற்றி பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் அந்த மேடையில் தனது குடும்பப் பின்னணி பற்றியும், சினிமா துறைக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது பற்றியும் கூறியுள்ளார். மேலும் இவர் முதன்முதலாக தனது பதினோராம் வகுப்பில் வருமையின் காரணமாக வேலைக்கு சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் போது என்ன உடை அணிவது என்று கூட அவருக்கு தெரியாதாம். பல இயக்குனர்கள் அவரின் நிறத்தை பார்த்து சினிமாவில் உனக்கு நடிகையாக வாய்ப்பெல்லாம் கிடைக்காது என்று முகத்திற்கு நேராக கூறியுள்ளார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதலில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் இதனைதொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் 2010 ஆம் ஆண்டு நீ தானா அவன் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் இதனை தொடர்ந்து உயர்திரு 420, அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்,  காக்கா முட்டை, தர்மதுரை, சாமி 2, வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.