மீம்ஸ் கிரியேட்டர்களை பாராட்டி நடிகர் விவேக் வெளியிட்ட ட்வீட்.!! அதற்கு நடிகை குஷ்புவின் ஆதரவு.!! வைரலாகும் மீம்ஸ்.

Tweet released by actor Vivek in praise of memes creators !! Actress Khushboo’s support: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், மேலும் ஏழை மக்கள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று மாதங்களாக தங்களது அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் புதிதாக விவசாயிகளை தாக்கும் வெட்டுக்கிளிகள். கூட்டம் கூட்டமாக உள்ள வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் நிலத்தில் உள்ள பயிர்களைத் தின்றே அழித்துவிடுகிறது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பயிர்களுக்கு கொரோனாவினால் சரியான ஏற்றுமதி இல்லாததால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த வெட்டுக்கிளி பிரச்சனை விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது.

உலகில் எது நடந்தாலும் அதற்கு விமர்சனம் செய்யும் வகையில்  மீம்ஸ் கிரியேட்டர்கள் ஏதேனும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மக்களை சிந்திக்கும் வண்ணம் நகைச்சுவையான முறையில் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெட்டுக்களி பிரச்சினைக்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள் விவேக்கின் காமெடி புகைப்படத்தினை பதிவிட்டு வெட்டுக்கிளி பிரச்சினையையும், மது பிரியர்களையும் இணைத்து ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

இந்த மீம்ஸ்சை பார்த்து வியந்துபோன நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த மீம்ஸ்சை நடிகை குஷ்புவும் லைக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் மீம்ஸ் கிரியேட்டர்களை பாராட்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வச்சுக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க!! யாரையெல்லாம் ஓட்டுறீங்க!!” மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க” என்ன பாராட்டி பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்விட்டர் பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment