senthil comedian-tamil360newz

காமெடி நடிகர் செந்திலுடன் அந்த இன்னொரு வாழைப்பழம் எங்க? என்று மல்லுக்கட்டும் வெளிநாட்டு அழகி!! வைரலாகும் வீடியோ!!

Where’s that banana with comedy actor Senthil, The foreign beauty who asked the question video viral: காமெடி என்றாலே முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது செந்தில் கவுண்டமணி காமினேஷன் தான். இவர்களின் காமெடி இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக நடிகர் செந்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். கவுண்டமணியிடம் குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்டு அவரை குழப்பமடைய செய்து அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் வல்லவர்.

இவர்களின் நடிப்பில் வெளிவந்த பல காமெடிகள் இன்றளவும் அவர்களது ரசிகர்களால் பெரிதும்  விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் அது மட்டுமலலாமல் ரசிகர்கள் அவர்களின் காமெடிகளை டிக் டாக் செய்து இணைய தளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து உள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்து  1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தில்  இடம்பெற்ற வாழைப்பழ காமெடியை வெளிநாட்டு ரசிகை ஒருவர் டிக் டாக் செய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த காமெடி வெளிவந்து முப்பது வருடங்களை கடந்தாலும் இன்னும் மக்களால் ஏதோ ஒரு மூலையில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் ஆகும். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://twitter.com/beercomerad/status/1266410922840518656?s=20

Mahima-nambiar-tamil360newz

காதலனைப் பார்த்து இப்படித் தான் சிரிப்பேன் என்று வீடியோ வெளியிட்ட நடிகை மஹிமா நம்பியார்!!

Actress Mahima Nambiar released how she laugh infront of her crush video:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மஹிமா நம்பியார். இவர் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை என்ற திரைப்படத்தில் மாணவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமானார்.

இதை தொடர்ந்து இவர் எண்ணமோ நடக்குது, மோசகுட்டியே, குற்றம் 23,  கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இவர் ஐங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் அது மட்டுமில்லாமல் தனது ரசிகர்களுடன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உரையாடி கொண்டிருப்பார்.அவர்கள் கேட்கும் கேள்விக்கு சற்றும் தயங்காமல் பதில் அளித்து வருவார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரண்ட் முன்னாடி எப்படி சிரிப்பார்?  கிரஸ் முன்னாடி எப்படி சிரிப்பார்?  பெஸ்ட் பிரெண்ட் முன்னர் எப்படி சிரிப்பார்? என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Atharvaa actor -tamil360newz

நடிகர் அதர்வாவிற்கு இந்த மாதிரி பொண்ணுதான் வேணுமாம்!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

Actor Atharva expect these kind of wife, video viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இதயம் முரளி. இவரைத் தொடர்ந்து இவரின் மகன் அதர்வாவும் தற்போது சினிமாவில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் அதனைத் தொடர்ந்து தற்போது குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். நடிகர் அதர்வா சிறந்த கதைகளை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.

நடிகர் அதர்வா சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி தொகுப்பாளினி டிடி அவர்கள் நடத்திய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று கேட்டிருப்பார். மேலும் அதில் அவர் உங்களுக்கு வரப்போகும் மனைவி அழகாகவா?  செக்ஸியாக வா?  விளம்பரத்தில் வரும் பெண்களை போலவா? எப்படி இருக்க வேண்டுமெனக் கேட்டிருப்பார்.

அதற்கு பதிலளித்த அதர்வா அவர்கள் எனக்கு வரப்போகும்  மனைவி அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் நன்றாக பேசி பழகினால் போதும் எனக் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

meera-chopra-tamil360newzmeera-chopra-tamil360newz

வெட்டுக்கிளியை உயிருடன் சாப்பிட்ட நபர்.!! அந்த வீடியோவை பதிவிட்டு கோபமடைந்த பிரபல நடிகை.

The person who ate the locust alive. The famous actress who got angry after posting the video: நடிகை மீரா சோப்ரா தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர் ஜாம்பவான், லி, மருதமலை, ஜகன் மோகினி, கில்லாடி, இசை போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் கடைசியாக கில்லாடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நாஸ்டிக், மொகாலி பூவு, போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முடிவதற்கு முன் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் நிலத்தை அழித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில்  இவர் சமீபத்தில் வெட்டுக்கிளியை ஒருவர் உயிருடன் உண்ணும் வீடியோ ஒன்றை பார்த்து உள்ளார்.

இயற்கை நமக்கு கற்று கொடுக்கும் பாடத்தை புரிந்துகொள்ளாமல் நாம் இன்னும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதா என கோபத்துடன் அந்த வீடியோவை தனது ட்வட்டரில் பதிவிட்டு “இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது, இது நிஜம்தானா? உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை இன்னுமும் சாப்பிடுகிறார்களா? கொரோனா வைரஸிடமிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லையா?” என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.