இணையதளத்தில் வைரலாகும் நடிகை சமந்தாவின் ரிப்போர்ட் கார்டு!! எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார் பாருங்கள்.

Samantha’s Report Card Going Viral On The Website: நடிகை சமந்தா தமிழில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இதை தொடர்ந்து பல்வேறு படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்கட்டி தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.

இவர் நடிகர் நாக சைதன்யா திருமணம் செய்துகண்டார். இருப்பினும் அவர் இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2  காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் வெப்சீரிசிலும்  நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே உள்ள சமந்தா அந்த நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பது பற்றி கற்றுக்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனது கணவருடன் பைக் ரைட் செல்வது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றை வீட்டிலேயே இருந்துகொண்டு செய்து வருகிறார்.

அந்தவகையில் நடிகை சமந்தா ரிப்போர்ட் கார்டை  இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒரு மாணவியாக  மகளாக, நடிகையாக,  போராளியாக, மனைவியாக, மருமகளாக,  அம்மாவாக அனைத்திலும் முன்னிலையில் உள்ளார். தற்போது இணையதளத்தில் வைரலாகும்  நடிகை சமந்தாவின் ரிப்போர்ட் கார்ட்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment