ஆட்டோகிராப் vs பிரேமம் படத்தை ஒப்பிட்டு பார்ப்பார்கள் என கவலை அடைந்த பிரேமம் பட இயக்குனர்.!! உங்களின் கருத்துகளை பகிரவும்!!

The film director who was worried that they would compare the autograph vs Premam : மே 29 அன்று பிரேமம் படம் ரிலீசாகி 5 வருடம் ஆனதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். எனவே அதனைத்தொடர்ந்து பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ்புத்திரன் அதனை கொண்டாடுவதை முன்னிட்டு பேட்டி அளித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படத்தில், நிவின்பாலி, மடோனா செபஸ்டியன், சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.  இந்த திரைப்படத்திற்கு இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மேலும் அது மட்டுமல்லாமல் சாய் பல்லவி மட்டும் நிவின் பாலியின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது என்பதை அனைவரும் அறிந்ததே. இந்தத் திரைப்படம் சென்னையில் நூறு நாட்களுக்கு மேல் திரையிடப்பட்டது. அந்த பேட்டியில் பிரேமம் மற்றும் ஆட்டோகிராப் படத்தை ஒப்பிட்டு பார்ப்பார்கள் என்ற கவலை இருந்ததா என்ற கேள்வி எழுப்பினார்கள்.

அதில் ” ‘ஆட்டோகிராஃப்’ படத்தோடு ‘பிரேமம்’ படத்தை ஒப்பிடுவார்கள் என்று கவலை இருந்ததா?” என்ற கேள்விக்கு அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:

“ஆம், நிறைய கவலை இருந்தது. அதனால்தான் ட்ரெய்லரை வெளியிடாமல் இருந்தேன். வெளியிட்டிருந்தால் உடனே ‘ஆட்டோகிராஃப்’ படத்தோடு ஒப்பிட்டிருப்பார்கள். மக்கள் படம் பார்க்க வந்திருக்க மாட்டார்கள். அதனால் இரண்டு பாடல்களை மட்டுமே வெளியிட்டேன். மக்களுக்குப் படம் பிடித்துப்போனது. படம் பார்த்து சேரன் சார் என்னை அழைத்தார். அவருக்கும் படம் பிடித்திருந்தது.

‘ஆட்டோகிராஃப்’ ஒருவரின் வாழ்க்கைக் கதையைச் சொல்வதுபோல, ‘பிரேமம்’ படத்தின் தலைப்பைப் போல, காதலைப் பற்றி மட்டுமே” என அல்போன்ஸ் புத்திரன் பேட்டியளித்துள்ளார்.

 

 

 

 

Leave a Comment