இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அட்லியை புகழ்ந்த பிரபல இயக்குனர்!!

leading director praised director vetrimaran and atlee: கரண் ஜோகர் இந்திய திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவர். பாலிவுட்டில் வெற்றியடைந்த இளம் திரைப்பட தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர்.இவர் தில்வாலே துல்ஹனியா லே ஜெயங்கே, ஓம் சாந்தி ஓம், லக் பை சான்ஸ் போன்ற திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இயக்குனராக குச் குச் ஹோத்தா ஹே, கபி குஷி கபி கம், மை நேம் இஸ் கான் போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் தோஸ்தானா, வேக் அப் சித், குச்சி குச்சி ஹோதா, மை நேம் இஸ் கான் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரண் ஜோகர் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் வெற்றிமாறன் இயக்கி இருந்த அசுரன் திரைப்படத்தை பார்த்தேன். கடவுளே என்ன ஒரு அற்புதமான படம். தனுஷின் நடிப்பு அபாரம் படத்தின் விறுவிறுப்பான காட்சிகளால் சீட்டின் நுனிக்கே வந்து விட்டேன்.

அதேபோல் அட்லி இயக்கிய பிகில் படத்தையும் பார்த்தேன் இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம். அட்லியின் அனைத்து படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். மசாலா படங்களை எடுப்பதில் அவர் ஒரு மாயாவி என்று கூறியிருக்கிறார். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோக்கருக்கு அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Comment