உங்க பொண்டாட்டி யார் சார் போலீஸ் கேட்ட கேள்வி.! கோபி சொல்லப்போகும் பதில்.! கண்ணீரில் ராதிகா.. பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட்.!

baakiyalakshmi-june-7-episode

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா ஈஸ்வரியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார் அதனால் …

Read more

மூர்த்தி முன்பு கண்ணனை இழுத்து வந்து நிறுத்திய தனம்.! ஐஸ்வர்யாவை வண்ட வண்டயாக கேள்வி கேட்ட முல்லை.. இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட்.

mullai

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் கதிர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுவிட்டார். ஆனால் கதிர் வேலை விஷயமாக …

Read more

தமிழ் செய்த வேலையால் சந்தோஷத்தில் கோதை.! இது சரிப்பட்டு வராது என நமச்சியை வைத்து அர்ஜுன் செய்த சதி.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.!

thamizhum-saraswathiyum-june6

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் உமாபதி ஆபீஸ்க்கு செல்கிறார் அங்கு முதலாளிக்காண அசோசியேஷன் தலைவராக நிற்பதற்கு அனைவரும் பேசிக் …

Read more

போலீசை வரவைத்து கெத்து காட்டும் ராதிகா.! அசிங்கப்பட்டு நிற்கும் ஈஸ்வரி குடும்பம்.. கோபி என்ன செய்வார்.?

BAAKIYALAKSHMI97

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சும்மாவே ஆட்டம் போட்டு வந்த ராதிகாவை மேலும் உசுப்பேத்தி இருக்கிறார் ஈஸ்வரி. அதாவது எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பாக்கியா தங்கி இருக்கும் வீட்டில் ராதிகா கோபியுடன் வாழ்ந்து வருகிறார் எனவே ராதிகா மிகவும் திமிராக பாக்யாவிடம் அடிக்கடி வம்பு வலத்துவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் இது கோபியின் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவின் செயலை பார்த்த கோபியின் அம்மாவான ஈஸ்வரிக்கு சுத்தமாக பிடிக்காமல் போன நிலையில் பொறுமையை இழந்த இவர் ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். இவ்வாறு இதனை எதிர்பாராத ராதிகா தனது அம்மாவிடம் கூறி புலம்ப அதற்கு அவருடைய அம்மா இதனை இப்படியே விட்டால் சரியாகாது நீ கொஞ்சம் பொறுமையா இரு நான் வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

இந்த நேரத்தில் ராதிகா அழுதுக் கொண்டே ரோட்டில் ஓரத்தில் நிற்க இதனை பார்த்த கோபி என்ன ஆச்சு என கேட்க உங்க அம்மா என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள் எனக் கூறி கட்டிப்பிடித்து அழுகிறார். இதனைக் கேட்ட பிறகு கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று ஈஸ்வரி இடம் ஞாயம் கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி இனிமேல் அவ பண்றத என்னால சகிச்சுக்கிட்டு இருக்க முடியாது ஒன்னு இந்த வீட்ல அவ இருக்கணும் இல்லன்னா நான் இருக்கணும் என்னன்னு நீயே முடிவு பண்ணி சொல்லு என கூறினார்.

இப்படி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராதிகாவின் அம்மா போலீசை கூட்டிட்டு வர பின்பு போலீஸ் சட்டப்படி ராதிகா தான் கோபியின் மனைவி அதனால் அவரை இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் யாருக்கும் இல்லை இனிமேல் ராதிகா இங்குதான் இருப்பார் என சொல்லி விடுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பாக்கியா தயங்கி நிற்கும் நிலையில் ராதிகா மிகவும் திமிராக பார்த்துகிட்டு உள்ளே செல்கிறார். இவ்வாறு இந்த பிரச்சனை நடந்திருக்கும் நிலையில் கோபி என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மறுபுறம் ராதிகாவின் ஆட்டம் இதற்கு மேல் தாங்க முடியாது.

முட்டாளா இருந்துகிட்டு நீ எல்லாம் ஒரு கலெக்டர்.! அபி செய்த கேவலமான செயலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வெற்றி..

thenral-vanthu-yennai-thotum-243

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அபி, வெற்றி இருவரும் நடுக்கடலில் போட்டியில் சிக்கிக் கொண்டுள்ளனர் எனவே இவர்களை யார் காப்பாற்றுவார்கள் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அபி மூளை இல்லாமல் செய்து வரும் செயல்களைப் பார்த்து வெற்றி கடுப்பாகி உள்ளார்.

அதாவது அபி தொடர்ந்து பல எதிரிகளுக்கு எதிராக போராடி வந்த நிலையில் இவரை பழிவாங்க வேண்டும் என பலரும் முயற்சித்து வந்தனர் எனவே அபியின் உயிருக்கு ஆபத்து இருப்பதனால் பல போலீஸ்கள் காவலுக்கு போட்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அனைத்து போலீஸ்சைம் அடித்து விட்டு ரவுடிகள் அபியை கடத்தி செல்கிறார்கள்.

நடுகடலில் போட்டியில் அழைத்துச் செல்ல இதனைத் தெரிந்து கொண்ட வெற்றி விரைந்து வந்து அபியை காப்பாற்ற முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் ரவுடிகள் அபியை தூக்கி நடு கடலில் வீசி விடுகிறார்கள். எனவே அபியை காப்பாற்றுவதற்காக வெற்றியும் கடலில் குதித்து விடுகிறார். ஒரு வழியாக அபியை காப்பாற்றிய நிலையில் இவர்கள் செல்லும் போட்டில் இருந்த டீசல் தீர்ந்து விடுகிறது.

எனவே நடு கடலில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை இருக்கிறது எனவே அதனை வைத்து ஒரு வாரத்திற்கு வைத்துக் கொண்டாலும் விரைவில் போலீஸ் அவர்களை மீட்டு விடுவார்கள் என நினைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிக்கு தெரியாமல் அபி குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை வைத்து குளித்து விடுகிறார் எப்படி இவ்வளவு பிரஷ்ஷா இருக்கா என வெற்றி கேட்க அதனால் தான் குளித்தேன் கொஞ்சம் தண்ணி இருக்குனு சொன்னில அதை வைத்து குளித்து விட்டேன் என கூறியவுடன் வெற்றிக்கு அதிர்ச்சி ஆகிறது.

உனக்கு எல்லாம் அறிவு இல்லையா நம்ப இந்த போட்ல இருக்கிற வரையும் தண்ணீர் தான் நமக்கு ரொம்பவும் முக்கியம் அதை வச்சு குளிச்சிட்டியே என கூறுகிறார். அதற்கு அபி போலீஸ் வந்து நம்மளை சீக்கிரம் மீட்டு விடும் எனக் கூற உன்னை காப்பாத்துனது நான்தான் போலீஸ்லாம் வராது என சொல்ல நீ எல்லாம் எப்படி கலெக்டர் ஆனாயோ தெரியல என கூறி திட்டிகிறார் இதோ அந்த ப்ரோமோ..

முடியை பிடித்து தரதரவென இழுத்து ராதிகாவை ரோட்டில் தள்ளிய ஈஸ்வரி.! போலீசை அழைத்து வந்து மிரட்டிய அம்மா..

baakiyalakshmi-68

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான …

Read more

என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக்கிட்டு முழிக்கும் செழியன்.! சக்காளத்தியா வர அடி போடும் ஃளைன்ட்..

baakiyalakshmi96

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கோபி ராதிகா பாக்கியாவின் வீட்டில் தங்கி வருவதனால் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது.

போதாக்குறைக்கு ராதிகாவின் அம்மா மையூவையும் ராதிகா கோபியுடன் அழைத்து வந்து விடுகிறார். பாக்யா மயூவை ஏற்றுக்கொண்ட நிலையில் ராதிகாவிற்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி பேசி வருகிறார்கள். இதனை அடுத்து கோபி மயூக்கு சொல்லி தராதா இனியாவிற்கு சொல்லித் தரதா என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் இனியா படித்துக் கொண்டிருக்கும் நிலையில் மயூவிற்கு தூக்கம் வருகிறது ஆனால் லைட் ஆப் பண்ணினால் தான் தூங்க முடியும் என்பதற்காக சிரமப்பட்டு வருகிறார். மையூவை பார்த்த கோபி நீ தூங்கு மையூ எனக் கூற எனக்கு லைட் ஆப் பண்ணாத தூக்கம் வரும் என சொல்கிறார்.

கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என கூற இந்த நேரத்தில் ராதிகாவும் வர லைட் ஆப் பண்ண வேண்டும் என சொல்ல குழந்தை படிச்சுக்கிட்டு இருக்காளே எப்படி லைட் ஆஃப் பண்ண முடியும் அப்படியே படுத்துக்கொள் என சொல்ல ராதிகாவும் படுத்து கொள்கிறார். பிறகு எப்படியாவது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டும் என்று கோபியின் காலில் வேகமாக கையை தூக்கி போட எதற்கு இப்ப என்ன அடிச்ச  என கோபி கேட்கிறார்.

ராதிகா தெரியாமல் கைப்பட்டு விட்டது என சொல்ல பிறகு கோபி வலி தாங்க முடியாமல் கதறுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் செழியன் வீட்டிற்கு வந்தவுடன் லேப்டாப்பை மூடி வைக்க ஜெனி எதற்கு முடி வைக்கிறாய் வொர்க் ப்ரம் ஹோம் தான வேலை செய்யயென சொல்ல இல்லை உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் என கூறிக் கொண்டிருக்கிறார்.

பிறகு செழியனுக்கு போன் வர யாரு அந்த பெண் க்ளைண்டா என கேட்கிறார் அதற்கு ஆமா நீயும் கேளு என கூறிவிட்டு போன் ஸ்பீக்கரில் போட ஆபிசர் போன் செய்கிறார். இவ்வாறு அந்த மாலினி போன் பண்ணி இருந்தாங்க என்னமோ நம்ப சைடுல கம்யூனிகேஷன் ப்ராப்பரா இல்ல என சொல்லி இருந்தாங்க இந்த டீல முடிச்சுடுறேன்னு சொன்னீங்க ஆனா முடிக்கவில்லையே என கேட்க சார் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன் ஆனால் அவங்க ஒர்க்க பத்தி பேசாம தேவையில்லாத மத்த எல்லாத்தையும் பேசுறாங்க என கூறுகிறார் இவ்வாறு செழியன் என்ன செய்வது என்று தெரியாமல் ஆஃபீசரிடம் மாட்டிக் கொள்கிறார்.

அனைவரும் முன்பும் அமிர்தாவை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி.! பாக்கியாவிடம் திமிராக பேசிய மொக்கை வாங்கிய ராதிகா.. பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்

baakiyalakshmi-6879

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நிலா …

Read more

கோதையிடம் உண்மையை புரிய வைக்க முயற்சி செய்யும் நடேசன்.! கூடிய சீக்கிரம் அர்ஜுனுக்கு விழபோகும் தர்மஅடி…

thamizhum saraswathiyum june

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த …

Read more

தன்னந்தனியாக நடுகடலில் மாட்டிக் கொண்ட வெற்றி, அபி.!

thenral-vanthu-yennai-thotum

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் அபி தொடர்ந்து பல குற்றங்களை கண்டுபிடித்து பலரையும் தண்டித்து வருகிறார் எனவே அபிக்கு ஏராளமான எதிரிகள் இருந்து வரும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போதை சாக்லேட் தயாரிக்கும் ஃபேக்ட்ரியை மூடியதோடு மட்டுமல்லாமல் அதனுடைய ஓனரையும் கண்டித்து தக்க தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். எனவே அபி எப்படியாவது பழி வாங்க வேண்டும் என நினைத்து வருகின்றனர் அப்படி தற்பொழுது வீடு புகுந்து அபியை கடத்தி இருக்கும் நிலையில் வெற்றி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதாவது தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வெற்றியை தனது நண்பர்களிடம் அபி போத சாக்லேட் விஷயத்துல அவளோட துணிச்சலை பார்த்தோம்ல ஆனா இந்த விஷயத்துல அவளோட துணிச்சல் வேற அளவு சித்தப்பு ஆன் தி ஸ்பாட்ல வெள்ளராஜாவையே தூக்கிட்டானா பாரேன் என கூறி அதற்க்கு அவர் நண்பர் அபி வெலனு வந்துட்டா வெள்ளைக்காரன் என கூறுகிறார்.

இந்த நேரத்தில் சுடர் வெற்றிக்கு போன் செய்து அபியை தூக்கிக்கிட்டு போயிட்டாங்க மாஸ்க் போட்டுட்டு வந்து எல்லா போலீசையும் அடிச்சிட்டாங்க என கூறுகிறார் எனவே நான் உடனே வருவதாக சொல்லிவிட்டு வெற்றி கிளம்புகிறார். அபியை கடத்தி கடலிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

வெற்றியும் அபியை கண்டுபிடித்து செல்லும் நிலையில் அவர் எதிரிகளால் கடலில் காடத்தி செல்வதை தெரிந்துகொண்டு வெற்றியும் ஒரு கப்பலை எடுத்துக்கொண்டு செல்கிறார் அங்கு வெற்றி வருவதை தெரிந்து கொண்ட எதிரிகள் அபியை தூக்கி நடுக்கடலில் போட்டு விடுகின்றனர்.

வெற்றி தண்ணீரில் குதித்து அபியை காப்பாற்றி விட இருவரும் தனியாக போட்டில் இருந்து வருகிறார்கள் இந்த நேரத்தில் போட்டில் இருந்து டீசல் தீர்ந்து விடுவதால் நடுகடலில் நின்று விடுகிறது. எனவே இதற்கு மேல் இவர்கள் எப்படி இந்த கடலில் இருந்து தப்பிப்பார்கள் என்பது குறித்த எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

அர்ஜுன் வண்டவாளத்தை வெளிக்காட்ட சரஸ்வதி கொடுத்த ஐடியா.! நடேசன் எண்ணம் நிறைவேறுமா.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

thamizhum-saraswathiyum-june-2

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நமச்சி தமிழை கம்பெனிக்கு அழைக்கிறார் அப்பொழுது தமிழ் போ நான் வந்து விடுகிறேன் எனக்கு …

Read more

ரிசப்ஷனுக்கு கிளம்ப சொன்ன பாட்டி.. எக்கேடாவது கெட்டுத்தொலை என மகாலட்சுமியை திட்டும் சூர்யா.! ஆஹா கல்யாணம் இன்றைய ப்ரோமோ வீடியோ

aaha-kalyanam

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி மக்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஆஹா கல்யாணம்.

இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியின் அக்காவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் ஆனால் அந்த பெண் எனக்கு இவனை பிடிக்கவில்லை என கூறி ஓடி விடுகிறார். எனவே வேறு வழி இல்லாமல் அந்தப் பெண்ணின் தங்கை கதாநாயகி கதாநாயகனை திருமணம் செய்து கொள்கிறார் ஆனால் இவர்களுக்குள் ஒத்துப் போகாமல் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.

எனவே இவர்கள் எப்படி ஒன்றிணைவார்கள் என்பது வைத்து கதை களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கதாநாயகியான மகாலட்சுமி மிகவும் பொறுப்பாக வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து வரும் நிலையில் சூர்யாவின் பாட்டி மற்றும் மற்ற வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அப்படி மகாலட்சுமி போட்டிருந்த கோலம் அனைவரையும் கவர்ந்த நிலையில் தனது அம்மாவும் மாறிவிடுவாரோ என்ற பயத்தில் சூர்யா வேண்டுமென்றே கோலத்தை அலைத்து விடுகிறார். இதனை மகாலட்சுமியும் பார்த்துவிட அவருக்கு மிகவும் கோபம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏட்டிக்கு போட்டியாக இருவரும் எது செய்தாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சூர்யாவின் பாட்டி மகாலட்சுமியிடம் நகைகளை போட்டுக்கொண்டு தயாராக வேண்டும் என சொல்கிறார் ஆனால் மகாலட்சுமி முடியாது எனக் கூறிவரும் நிலையில் அவர் என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை நான் ஏன் ரெடியாக வேண்டும் என கேட்கிறார்.

இதனை பார்த்த சூர்யா பாட்டி நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என சொல்ல பாட்டி வெளியில் சென்று விடுகிறார் பிறகு மகாலட்சுமியிடம் சூர்யா நகைகளை போட்டுக் கொள்ளுமாறு கூற என்னால் முடியாது என்ன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க என கத்த அதற்கு சூர்யா இப்ப நான் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார் வெளியில் போங்க என சொல்ல அதற்கு எப்படியோ கெட்டுப் போ என சொல்கிறார் கடுப்பான சூர்யா கையில் இருந்த நகையை தூக்கிப் போட மகாலட்சுமியின் கழுத்தில் விழுந்து விடுகிறது இதனை நினைத்து மகாலட்சுமி கண்கலங்க பாட்டி மகிழ்ச்சி அடைகிறார். இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது..