கோதையிடம் உண்மையை புரிய வைக்க முயற்சி செய்யும் நடேசன்.! கூடிய சீக்கிரம் அர்ஜுனுக்கு விழபோகும் தர்மஅடி…

thamizhum saraswathiyum june
thamizhum saraswathiyum june

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலை காண   ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக புது புது டிவிஸ்ட்களுடன் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதிலும் சமீபத்திய எபிசோடில் அர்ஜுனை கத்தியால் குத்தியது யார் என்ற சந்தேகம் தற்பொழுது நடேசன் மத்தியில் எழுந்துள்ளது அதனால் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு இருக்கும் சிசிடிவி கேமரா வீடியோவை எடுத்துக் கொண்டு வருகிறார் அந்த வீடியோவை பார்ப்பதற்காக லேப்டாப்பை ஓபன் செய்து அனைத்து வீடியோக்களையும் ஓபன் செய்கிறார் ஆனால் இதில் 300 to 400 வீடியோக்கள் இருப்பதால் எந்த தேதி என்ற குழப்பத்தில் இருக்கிறார் நடேசன்.

பார்க்க கூடாது என அர்ஜுன் பக்கவாக பிளான் செய்கிறார் அதனால் ராகினியிடம் அப்பாவை வாக்கிங் கூட்டிட்டு செல்ல சொல்லு என கூறி விடுகிறார். இதனால் நடேசன் ராகினி அழைத்துக்கொண்டு செல்வதால் லேப்டாப்பில் இருக்கும் வீடியோக்களை யாருக்கும் தெரியாமல் டெலிட் செய்து விடுகிறார் அர்ஜுன் ஆனாலும் அவருடைய சட்டை பட்டன் மற்றும் கீழே விழுந்து விடுகிறது.

பிறகு நடேசன் லேப்டாப்பை செக் செய்த பொழுது இரண்டு மூன்று நாட்களின் வீடியோக்கள் டெலிட் ஆகியுள்ளது இதனால் அதிர்ச்சடைகிறார் நடேசன் அதுமட்டுமில்லாமல் யோசித்து கொண்டிருக்கும் பொழுது கீழே புதுவிதமான பட்டன் கிடைக்கிறது இது யாருடையது என யோசித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் சரஸ்வதி மீது எழுந்த சச்சை பேச்சு தமிழை வாட்டி வதைக்கிறது அதனால் கோவிலுக்கு செல்கிறான்.

சரஸ்வதி இருவருமே கோவிலுக்கு தான் சென்றுள்ளார்கள் ஆனால் இருவரும் வெவ்வேறு திசையில் சாமி கும்பிட்டே இருக்கிறார்கள் இந்த நிலையில் நடேசன் மற்றும் கோதை  இருவரும் கோவிலுக்கு வருகிறார்கள் அப்பொழுது சரஸ்வதியை பார்த்து கோதை திட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் கோதை திட்டுவதை தமிழ் பார்த்து விடுகிறார் இந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் நடேசன் கோதையிடம் தமிழ் விஷயத்துல நம்ம தப்பு பண்ணிட்டமோ என்று நினைக்கிறேன் எனக்கூற அதற்கு கோதை புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பேசுகிறார் அந்த சமயத்தில் யார் மீது சந்தேகம் இருப்பதாக கேட்க அர்ஜுன் மாப்பிள்ளை என்று கூறுகிறார் நடேசன் அவரே கத்தியால் குத்துபட்டு இருந்தார் அவர் உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயமாக இருக்கு எனவும் கூறுகிறார்கள், ஆனால் நடேசனுக்கு அர்ஜுன் மீதுதான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது விரைவில் அர்ஜுன் பிடிபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.