முட்டாளா இருந்துகிட்டு நீ எல்லாம் ஒரு கலெக்டர்.! அபி செய்த கேவலமான செயலால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வெற்றி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அபி, வெற்றி இருவரும் நடுக்கடலில் போட்டியில் சிக்கிக் கொண்டுள்ளனர் எனவே இவர்களை யார் காப்பாற்றுவார்கள் என தெரியாமல் இருந்து வரும் நிலையில் அபி மூளை இல்லாமல் செய்து வரும் செயல்களைப் பார்த்து வெற்றி கடுப்பாகி உள்ளார்.

அதாவது அபி தொடர்ந்து பல எதிரிகளுக்கு எதிராக போராடி வந்த நிலையில் இவரை பழிவாங்க வேண்டும் என பலரும் முயற்சித்து வந்தனர் எனவே அபியின் உயிருக்கு ஆபத்து இருப்பதனால் பல போலீஸ்கள் காவலுக்கு போட்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அனைத்து போலீஸ்சைம் அடித்து விட்டு ரவுடிகள் அபியை கடத்தி செல்கிறார்கள்.

நடுகடலில் போட்டியில் அழைத்துச் செல்ல இதனைத் தெரிந்து கொண்ட வெற்றி விரைந்து வந்து அபியை காப்பாற்ற முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் ரவுடிகள் அபியை தூக்கி நடு கடலில் வீசி விடுகிறார்கள். எனவே அபியை காப்பாற்றுவதற்காக வெற்றியும் கடலில் குதித்து விடுகிறார். ஒரு வழியாக அபியை காப்பாற்றிய நிலையில் இவர்கள் செல்லும் போட்டில் இருந்த டீசல் தீர்ந்து விடுகிறது.

எனவே நடு கடலில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை இருக்கிறது எனவே அதனை வைத்து ஒரு வாரத்திற்கு வைத்துக் கொண்டாலும் விரைவில் போலீஸ் அவர்களை மீட்டு விடுவார்கள் என நினைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் வெற்றிக்கு தெரியாமல் அபி குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை வைத்து குளித்து விடுகிறார் எப்படி இவ்வளவு பிரஷ்ஷா இருக்கா என வெற்றி கேட்க அதனால் தான் குளித்தேன் கொஞ்சம் தண்ணி இருக்குனு சொன்னில அதை வைத்து குளித்து விட்டேன் என கூறியவுடன் வெற்றிக்கு அதிர்ச்சி ஆகிறது.

உனக்கு எல்லாம் அறிவு இல்லையா நம்ப இந்த போட்ல இருக்கிற வரையும் தண்ணீர் தான் நமக்கு ரொம்பவும் முக்கியம் அதை வச்சு குளிச்சிட்டியே என கூறுகிறார். அதற்கு அபி போலீஸ் வந்து நம்மளை சீக்கிரம் மீட்டு விடும் எனக் கூற உன்னை காப்பாத்துனது நான்தான் போலீஸ்லாம் வராது என சொல்ல நீ எல்லாம் எப்படி கலெக்டர் ஆனாயோ தெரியல என கூறி திட்டிகிறார் இதோ அந்த ப்ரோமோ..

Leave a Comment