ramya

நடிகை ரம்பாவின் உயரத்திற்கு வளர்ந்த மகள்.! அழகில் ஜொலிக்கிறாரே..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வரும் ஏராளமான நடிகைகள் இருக்கின்றனர். அப்படி முக்கியமாக 90ஸ் நடிகைகளை கூறலாம். தனது கவர்ச்சியினாலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை ரம்பா.

இவருடைய நடனம் பலரையும் கவர்ந்த நிலையில் இவரை தொடையழகி ரம்பா என அழைக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு சினிமாவிற்கு அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் இந்நிலையில் திடீரென திருமணம் செய்துக் கொண்ட ரம்பா சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார்.

வெளிநாட்டில் தனது கணவருடன் செட்டிலான ரம்பாவிற்கு தற்பொழுது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ரம்பா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார் சில காலங்கள் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் தனது கணவரை இணைந்தார் அதன் பிறகு தான் தனது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்கலாக தான் தனது கணவருடன் இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அப்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீனாவின் கணவர் இறப்பிற்கு பிறகு அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னை வந்திருந்தார் அது குறித்த புகைப்படங்களும் வைரலானது.

இந்நிலையில் தற்பொழுது ரம்பா அவரது மகளின் பள்ளி கிராஜுவேஷன் டேவில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ரம்பாவின் உயரத்திற்கு அவரது மகளும் வளர்ந்துள்ள நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமான கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் இவருடைய மகளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..