வேட்டையாடு விளையாடு பட நடிகையா இது.? ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே..

பொதுவாக நடிகைகளை பொருத்தவரை தங்களுடைய அழகு குறையும் வரை மட்டும்தான் சினிமாவில் தொடர்ந்து மார்க்கெட் குறையாமல் முன்னணி நடிகையாக வலம் வர முடியும் அதேபோல் பட வாய்ப்புகளும் கிடைக்கும் அழகு போய்விட்டால் அந்த நடிகை அவ்வளவுதான் சைடு கேரக்டரில் நடிக்க வேண்டியது தான் அப்படி பல நடிகைகள் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருந்தாலும் தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகியவர்கள் இருக்கின்றனர்.

அப்படி ஒருவர் தான் நடிகை கமலினி முகர்ஜி திரைப்படங்களில் நடிக்கும் பொழுது மிகவும் அழகாக தேவதை போன்று இருந்த இவர் தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருக்கிறார். எனவே இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அதாவது கடந்த 2006ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் தான் கமலினி. இந்த படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் இதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலினி கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்த இறைவி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

kamalinee
kamalinee

அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் கமலினி முகர்ஜி சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற பிரபல விழா ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார். அதில் அவர் வெயிட் போட்டு மிகவும் குண்டாக ஆனதால் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் எனவே இதனை பார்த்து ரசிகர்கள் வேட்டையாடு விளையாடு பட நடிகையா இது என ஷாக்காகி உள்ளார்கள்.

Leave a Comment