தாஸ் பட நடிகை ரேணுகா மேனனை ஞாபகம் இருக்கிறதா.! அவருக்கு இத்தனை குழந்தைகளா? வைரல் புகைப்படம்

ஏராளமான நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கென ஒரு மார்க்கெட் இருந்தும் சினிமாவை விட்டு விலகி குடும்பம் குட்டி என வாழ்ந்து வரும் நடிகைகளும் உள்ளார்கள்.

அப்படி ஒருவர் தான் நடிகையர் ரேணுகா மேனன். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தார். அந்த வகையில் இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் நம்மள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு கலந்த 2005ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய பிரபலத்தை தந்தது இதனை அடுத்து பிப்ரவரி 14, கலாபத் காதலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ரேணுகா திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர் இந்த மூன்று படங்களிலும் இழுத்து போத்திக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

renuka menon 2
renuka menon 2

இதனாலோ என்னவோ இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில் தற்போது வரையிலும் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் ரேணுகா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய இரண்டு பெண் குழந்தைகள் கணவர் ஆகியோர்களுடன் இருக்கும் கியூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

renuka menon
renuka menon

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தாஸ் பட நடிகையா இது? இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் அதே அழகுடன் ரேணுகா மேனன் இருக்கிறார். இதோ அவருடைய குடும்ப புகைப்படம்.

renuka menon 1
renuka menon 1

Leave a Comment