தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் செல்வராகவன். எழுத்தாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தன்னுடைய தம்பி மற்றும் நடிகருமான தனுஷை வைத்து துள்ளுவது இளமை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷை வைத்து 2003ஆம் ஆண்டு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற அடுத்த அடுத்த பல வெற்றி திரைப்படங்களை தந்தார். 7ஜி ரெயின்போ காலனி, புதுக்கோட்டை உள்ளிட்ட திரைப்படங்களிலும் சோனியா அகர்வால் நடித்திருந்த நிலையில் பிறகு செல்வராகவன் சோனியாவிற்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
எனவே கடந்த 2006ஆம் ஆண்டு சோனியா அகர்வால் பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக 2010 விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவன் இருவரும் பிரிந்து நல்ல நண்பர்களாக இருந்து வரும் நிலையில் சோனியா அகர்வால் தொடர்ந்து அடுத்தடுத்த குணச்சித்திர வேடங்களிலும், கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்..
இந்நிலையில் செல்வராகவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் செல்வராகவன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அப்பொழுது உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நிகழ்வு எது என தொகுப்பாளர் கேட்க அதற்கு பதில் அளித்த செல்வராகவன், சோனியா அகர்வாலுடன் விவாகரத்து நடந்த பொழுது தனுஷ் என்னிடம் வந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
கடவுள் உனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறார் இப்படியே இருந்து விடு சிங்கிளாகவே வாழ்நாள் முழுவதும் இருக்கலாம் என கூறினார். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது அதேபோல கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்ட பிறகு என்னுடைய வாழ்க்கையில் அவர் பெரிய மாற்றத்தை உருவாக்கினார். அதாவது உண்மையான ஒருவரை திருமணத்திற்கு முன்னரோ அல்லது திருமணத்திற்கு பின்னரோ காதலித்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும் அதுதான் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. அதிகபட்சம் அதுதான் நடக்கும் சில சமயங்களில் அடி கூட கிடைக்கும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவனின் நடிப்பில் சாணி காகிதம் மற்றும் பகாசூரன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.