2:30 மணி நேரம் ஒரே அறுவை.! பகாசூரன் கதை நல்லா தான் இருக்கு ஆனா படம் நல்லா இல்லை …

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான பகாசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்ச்சனத்தை பெற்று வந்த நிலையில் படத்தின் கதை நல்லா இருக்கிறது ஆனால் அந்த படத்தில் செல்வராகவன் தன்னுடைய நடிப்பை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மோகன் ஜி இயக்கத்தில் வெளியான துரோபதி ருத்ர தாண்டவம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பகாசுரன் திரைப்படம் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க சென்று இருக்கிறார்கள் ஆனால் மோகன் ஜியை நம்பி போனதற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதாவது படத்தில் செல்வராகவனுடைய நடிப்பு சொல்லும் அளவிற்கு இல்லை என்றும் இந்தப் படத்தில் பல காட்சிகள் எதற்காக வந்தது என்றே தெரியவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்தப் படத்தில் செல்வவராகவனின் நடனம் ரசிகர்களை சிரிப்பூட்டும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது. கதை பெண்களுக்கு ஏற்ற கதையாக இருந்தாலும் இந்த படத்தில் நடித்த கேரக்டர்களுக்கு சம்பந்தம் இல்லாதவாறு இருந்ததா கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையும் ஓரளவுக்கு தான் இருந்தது பெரிதாக சொல்லும் அளவிற்கு பகாசுரன் படத்தின் இசை இல்லை.

மேலும் நடிகர் நட்டியின் நடிப்பு அவருடைய துப்பறியும் காட்சிகள் படத்திற்கு ஓரளவு பொருந்தியதாகவும் கூறப்படுகிறது மத்தபடி இந்த படம் இரண்டரை மணி நேரம் ஒரே அறுவை தான் என்று கூறப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ஹிட் ஆகிய நிலையில் சமீப காலங்களாக படங்களை இயக்குவதை விட்டு விட்டு தற்போது நடிப்பதில் இறங்கிவிட்டார்.

அந்த வகையில் செல்வராகவும் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் சாணிக் காயிதம் திரைப்படத்தில் ஓரளவுக்கு நன்றாக நடித்திருப்பார் ஆனால் பகாசுரன் திரைப்படத்தில் மிக உச்ச மட்டமான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தி தரவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Comment