பாகாசூரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ.! படம் எப்படி இருக்கு.?

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பாகசூரன் திரைப்படம் இன்று திரையில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். பழைய வண்ணாரப்பேட்டை, திரோபதி, ருத்ர தாண்டவம், உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் இயக்குனர் மோகன் ஜி.

இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் செல்வராகவன் மற்றும் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு சான் சி எஸ் அவர்கள் இசையமைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து செல்வராகவனின் தம்பி தனுஷ் அவர்கள் நடிப்பில் உருவாக்கி உள்ள வாத்தி திரைப்படமும் இன்று வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் முதன் முறையாக அண்ணன், தம்பி இருவரம் இன்று மோதி கொண்டனர் இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

இதனை தொடர்ந்து பகாசூரன் திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகிய நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு காட்சி வெளியாகி இருந்தது. அது மட்டுமில்லாமல் சமூக கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெருமா இல்லையா என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்று ரசிகர்கள் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் கொடுத்துள்ளனர் அந்த விமர்சனத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

twitter விமர்சனம்:- கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோர்களும் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய திரைப்படம் பகசூரன், படிக்கும் பெண்களை பாலியலுக்கு வற்புறுத்தி மிரட்டுபவர்களை வதம் செய்யும் பாகாசூரன் திரைப்படத்தை அனைவரம் கண்டிப்பா பார்க்க கூடிய ஒரு படம், என்று பல ரசிகர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் கொடுத்து வருகின்றார்கள்.

மொத்தத்தில் பாகாசுரன் திரைப்படம் ட்விட்டர் விமர்சனத்தின் படி கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ ட்விட்டர் விமர்சனம்.

bakasuran
bakasuran
bakasuran
bakasuran

Leave a Comment