இலசுகளை உறைய வைக்க செல்வ ராகவன் போட்ட பக்கா பிளான்.! அட இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமா…?

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களை இயக்கிவிட்டு தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் தான் செல்வராகவன் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக கூற வேண்டும் என்றால் இவரது இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வசூல் செய்து இருந்தது.

அதனை தொடர்ந்து பார்த்தால் தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.ரவி கிருஷ்ணா,சோனியா அகர்வால் நடித்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாகவும் தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை சோனியா அகர்வால் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது செல்வராகவன் மற்றும் இவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள் பின்பு ஒரு சில காரணங்கள் குறித்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பார்த்தால் இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் ரவி கிருஷ்ணாவே நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவர் தனது உடல் எடையை முழுமையாக குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் யுவன் தான் இசையமைக்க உள்ளதாகவும் இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தாலும்.

ஒரு சில ரசிகர்கள் சோனியா அகர்வால் இந்த இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என கேள்வி எழுப்பி வரும் நிலையில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இறுதியில் சோனியா அகர்வால் இறந்து விடுவது போல் காட்டி இருப்பார்கள் அதனால் இந்த இரண்டாம் பாகத்தில் வேறு ஒரு நடிகை தான் நடிக்கப் போகிறார் எனவும் ஒரு சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment