Vithaikaaran Teaser: தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோக்களாக கலங்கி வரும் ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம்.
இவரை தொடர்ந்து சூரி, யோகி பாபு என அனைவரும் கதையின் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து தற்பொழுது வித்தைக்காரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தினை வெங்கி இயக்க விஜய் பாண்டி தயாரித்துள்ளார் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகத்திலேயே நாம் ஏமாறுகிறோம் என்று தெரிஞ்சும் சிரிச்சு சந்தோஷமாகி அதுக்காகவும் காசு தருகிறோம் என்றால் அது மேஜிக்ஷனுக்கு மட்டும்தான் என்ற வசனத்துடன் தொடங்க உடனே சதீஷ் மேஜிக் செய்யும் மேடைக்கு வருகிறார்.
அப்படி இந்த படத்தில் சதீஷ் மேஜிக் மேனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் திருடனாகவும் நடித்திருக்கிறார். ஏர்போர்ட் லாக்கர் மட்டுமல்லாமல் பறக்கின்ற ஏரோப்ளேன் கூட இவன் கொள்ளையடிப்பான் என்ற வசனங்கள் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் வைரம் கடத்தல் என விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாகி இருக்கும் விலையில் கண்டிப்பாக சதீஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் வொர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் வெளியேற இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அவர் தொடர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதன் மூலம் இந்த சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் தற்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சுசித்ரா பாக்கியலட்சுமி கேரக்டரிலும், கோபி சதீஷ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். முக்கியமாக கோபி கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது.
அப்படி ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் கோபியின் மேல் கோபமாக இருந்து வந்த நிலையில் ஆனால் தற்பொழுது அவருடைய நிலைமை பார்க்கவே மிகவும் காமெடியாக இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது ராதிகா பிடிவாதமாக பாக்யா, ஈஸ்வரி தங்கி இருக்கும் வீட்டிலேயே கோபியுடன் தங்கி வருகிறார். எனவே இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சதீஷ் சமீப வீடியோ ஒன்றில் நான் சொல்லப்போகும் இந்த விஷயம் நிறைய பேருக்கு கோபம் எரிச்சல் வருத்தத்தை தரலாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இதை செய்துதான் ஆக வேண்டும் இன்னும் 10, 15 எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து நான் விலகுகிறேன் அதில் எந்த மாற்றமும் இல்லை சதீஷ் ஆகிய நான் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தில் இருந்து விளக்குகிறேன் அதற்கு காரணங்கள் பல இருக்கிறது.
ஆனால் சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது இந்த கோபி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மிக்க நன்றி நானும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் என்னை பாராட்டும் அளவிற்கு என்னால் முடிந்த அளவு சுமாராக நடித்திருக்கிறேன் என் மீது அன்பு காட்டி அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருந்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் விஷால் சதீஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘அப்பா நீங்க எங்கேயும் போகக்கூடாது.. நான் போகவும் விடமாட்டேன்’ என குறிப்பிட்டு இருக்கிறார் கோபி சார் எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.
இதனை அடுத்து சதீஷ் தனது இன்ஸ்டால் பக்கத்தில் வாழ்க்கையில் பேசி தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை.. எவ்வளவு பிரச்சயினாளும் நம்ம நண்பர்களுடன் நமக்கு வேண்டப்பட்டவங்களோடு உட்கார்ந்து பேசினான் நிச்சயம் தீர்வு கிடைக்கும் உங்களுக்கு புரியாதா நான் என்ன சொல்ல வரேன்னு என ஒரு வீடியோவில் பேசிவுள்ளார்.
மற்றொரு வீடியோவில் இன்பாக்ஸில் நிறைய பேர் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நான் விலகுகிறேன் என்று சொன்னதும் போகாதீங்கன்னு சொல்லி நிறைய வேண்டுகோள் அனுப்புனீங்க அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் உங்கள் அன்புக்கும் ரொம்ப நன்றி என்னால் முடிந்த அளவுக்கு உங்க எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிக்கிட்டு இருக்கேன் சூட்டிங் பிஸியா போயிட்டு இருக்கு அதனால பலருக்கு ரிப்ளை பண்ண முடியல ஃப்ரீ ஆனதும் கண்டிப்பா அனுப்புறேன் எனக் கூறியுள்ளார்.