சீரியலில் தான் இப்படி என்றால் நிஜ வாழ்க்கையில் கோபிக்கு இப்படி ஒரு துயரமா.! எதிரிக்கு கூட இப்படி நடக்கக் கூடாது..

0
SATHISH

பொதுவாக சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் பலரும் முன்னணி நடிகர் அளவிற்கு தங்களுக்கென பெரிய ரசிகர் பட்டணத்தை வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லனாக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல் தான் பாக்கியலட்சுமி டிஆர்பியில் தொடர்ந்து சன் டிவி சீரியல்களிடம் பிடித்து வரும் நிலையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மட்டும்தான் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் கோபி கேரக்டர் தான் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது அதோடு மட்டுமல்லாமல் கொடூர வில்லனாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலின் கதைப்படி கோபி தன்னுடைய முதல் மனைவி பாக்கியாவை பிரிந்து ராதிகாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் இதனால் ரசிகர்கள் உண்மையாகவே சதீஷை திட்டி வந்தார்கள் எனவே சதீஷ் என்னை திட்டாதீங்க அவங்க சொல்றாங்க நான் நடிக்கிறேன் அவ்வளவுதான் எனவும் கூறி வந்தார்.

திருமணத்திற்கு பிறகு கோபி ராதிகாவிடம் மாட்டிக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார் சமாளிக்க முடியாமல் தவிப்பது போன்றவற்றை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள் இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தன்னுடைய வாழ்வில் நடந்த பெரிய துயர சம்பவத்தை சமீபத்தில் கூறியுள்ளார்.

சதீஷ் 5 வயதில் பெற்றோர்களை இழந்ததாக வருத்தத்துடன் விளக்கம் அளித்து இருக்கிறார் அதனால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பார்த்தால் தனக்கு தனி அக்கறை வரும் அவர்களின் வலி எனக்கு தெரியும் என ஒன்றில் கூறியுள்ளார் எனவே இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என வருத்தப்பட்டு வருகிறார்கள்.