காஞ்சூரிங் கண்ணப்பன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.!

sathish conjuring kannapan : தமிழ் சினிமாவில் சமீப காலமாக காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் சந்தானம் காமெடி நடிகனாக நடித்துவிட்டு பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார் அவரை தொடர்ந்து பரோட்டா சூரி ஹீரோவாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் யோகி பாபு அவர்களைத் தொடர்ந்து  தற்பொழுது காமெடி நடிகர் சதீஷ் தற்போது ஹீரோவாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் காஞ்சூரிங் கண்ணப்பன் இந்த திரைப்படத்தில் சதீஷ் அவர்களுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன் ரெஜினா ஆனந்த்ராஜ் ரெடீன்ஸ் கிங்ஸ்லி ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சில ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் காஞ்சூரிங் கண்ணப்பன் வெளியாகி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படம் முதல் நாளில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இனிவரும் நாட்களில்  இந்த திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதீஷ் இந்த திரைப்படத்தில் வேலை இல்லாமல் இருந்து வருகிறார் அதனால் திடீரென கேமிங் விஷயத்தில் ஈடுபட குளிக்க செல்லும் பொழுது மோட்டார் ரிப்பேர் ஆகி தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. பிறகு கொல்லைப்புறத்தில் இருந்து கிணற்றில் தண்ணீர் இறைக்கிறார் அப்பொழுது ஒரு பொருள் கிடைக்கிறது அந்த பொருளிலிருந்து ஒரு இறக்கையை பிச்சி விடுகிறார் கண்ணப்பன் அதன் பிறகு நடப்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்