ஹீரோவாக இருந்து ஜீரோவாக மாறிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி.! டீ மாஸ்டராக புதிய அவதாரம் எடுத்த சதீஷ்..

0
baakiya-lakshmi-sathish
baakiya-lakshmi-sathish

பெரும்பாலும் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகும் பிரபலங்களுக்கு விரைவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பிரபலத்தை சீரியல்கள் நடிகர், நடிகைகளுக்கு வழங்கி வருவது மிகப்பெரிய மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் நிலையில் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கி வருவது தான் விஜய் டிவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ்க்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்திய எபிசோடுகளில் அவருடைய கேரக்டர் குறைந்தது காமெடியனாகவே மாறி உள்ளார். இந்நிலையில் தற்பொழுது ரஞ்சித் பழனிசாமி கதாபாத்திரத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் நிலையில் பாக்கியலட்சுமி உடன் ரொமான்ஸ் செய்து வரும் காட்சிகளும் இடம் பெற்று வருகிறது.

ரஞ்சித் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே இதற்கு மேல் பாக்கியலட்சுமி சீரியலில் என்னுடைய கேரக்டர் குறையும் என சதிஷ் அறிவித்திருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருப்பதாகவும் எனவே மூன்று நாட்களாக இந்த ஷூட்டிங் நடைபெற்று வருகிறது எனவும் விரைவில் இது குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகும் எனவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

sathish
sathish

எனவே இவர் புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகிவிட்டார் என ரசிகர்கள் கூறிவந்த நிலையில் தற்பொழுது அதற்கு ஏற்றார் போல் பெட்டிக்கடையில் இன்று டி ஆத்துவது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “கூடிய சீக்கிரமே ஈஸ்வரி புட் கேண்டினில் டீ மாஸ்டராக சேர போகிறேன்” என பதிவிட்டுள்ளார். எனவே கடைசியில் கோபியோட நிலைமை இப்படி ஆயிடுச்சு என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்.