பாக்கியலட்சுமி சீரியல் நடித்து வரும் “கோபியின்” உண்மையான மனைவியை பார்த்து உள்ளீர்களா.. இதோ புகைப்படம்

Sathish : விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமடைந்தவர் சதீஷ்குமார் இவர் இந்த சீரியலுக்கு முன்பாகவே பல தமிழ் திரைப்படங்கள் மற்றும்  பல் தொலைக்காட்சி தொடர்கள் போன்றவற்றில்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆரம்பத்தில் மந்திரவாசல், சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார் சன் டிவி தொலைக்காட்சியில் அதிகம் நடித்து வந்த இவர் 2021 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவருக்கு வில்லன் மற்றும் ஹீரோ ரோல் என்று கூறலாம் மனைவிக்கு வில்லனாகவும் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாகவும் இருந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் திறைமை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இவருடைய திறமைக்கு நிச்சயம் வெள்ளித்திரையில் பல பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் சீரியலையும் தாண்டி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் அதிலேயும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது இப்படி பிஸியாக ஓடிக்கொண்டிருக்கும் சதீஷ்குமார் மலையாள நடிகை கீதா விஜயனை மணந்தார் இவர் தனது மனைவியுடன் இருக்கும் அந்த அழகிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் உங்களை போலவே உங்க  மனைவியும் செம்ம க்யூட்டாக இருக்கிறார்கள் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் வாழ வேண்டும் எனக் கூறிய கமெண்ட்டு அடித்து இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ தனது மனைவியுடன் சதீஷ் செம்ம ஜாலியாக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

sathish and wife
sathish and wife