டிசம்பர் 8ம் தேதி நாளை வெளியாகும் 3 தமிழ் திரைப்படங்கள்.!

Tamil Movies: இந்த ஆண்டு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையரங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வசூலை குவித்தது. அப்படி பல வருடங்கள் கழித்து இந்த ஆண்டுதான் முன்னணி நடிகர்களின் படங்கள் பல கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் இந்த வருடம் முடிய இருக்கும் நிலையில் தற்பொழுது வரையிலும் படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகி வருகிறது. அப்படி தற்பொழுது நாளை மட்டும் மூன்று திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்.

50 வயதிலும் குறையாத கவர்ச்சி.. ஸ்லீவ்லெஸ் புடவையில் நடிகை கஜோலின் ஹாட் போட்டோ ஷூட்

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் வெளியான படங்கள் வசூலில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஏராளமான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது அப்படியே திறக்கப்பட்டு இருந்தாலும் தியேட்டர்களிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ரிலீசான படங்களுக்கே விடை தெரியாமல் இருந்து வரும் நிலையில் டிசம்பர் எட்டாம் தேதி ஆன நாளை வெள்ளிக்கிழமை மூன்று படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கான்ஜுரிங் கண்ணப்பன், கட்டில், தீ இவன் ஆகிய மூன்று திரைப்படங்களும் நாளை திரையரங்களில் வெளியாகிறது.

மிக்ஜாம் புயலை விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்ட நயன்தாரா.! ரசிகர்கள் விமர்சனம்.. என்ன உதவி செய்தார் தெரியுமா?

மேலும் சென்னை பின்னணியில் எடுக்கப்பட்ட மலையாள படமான ‘ரஜ்னி’ என்ற படம் ‘அவள் பெயர் ரஜ்னி’ என்ற பெயரில் தமிழ் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தினை இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்க சதீஷ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர்  நடித்துள்ளனர்.

‘தீ இவன்’ படத்தை ஜெயமுருகன் முத்துசாமி இயக்க கார்த்திக், சுகன்யா, சன்னி லியோன், ராதா ரவி உள்ளிட்ட மேலும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.