pommai

லிப் லாக், ரொமான்ஸில் கலக்கும் ப்ரியா பவானி சங்கர்.! சைக்கோ திரில்லராக நடித்திருக்கும் எஸ்ஜே சூர்யா.. பொம்மை படத்தின் டிரைலர் இதோ

இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து வித்யாசமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் பொம்மை திரைப்படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் சற்று முன்பு வெறியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ட்ரெய்லரில் நம்ம எல்லாருக்கும் ஒரு கற்பனை உலகம் இருக்கும் அதில் நாம் நினைத்த மாதிரி வாழ்ந்து கொண்டிருப்போம் என்ன நமக்கு அதோட லிமிட் தெரியும் ஆனால் ராஜுவுக்கு அது தெரியவில்லை ஆனால் அந்த கோட்டை தாண்டி விட்டான் என்ற வசனத்துடன் இடம்பெற்றுள்ளது.

பொம்மைகளின் மீது அதிக ஆசை வர அந்த பொம்மைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் ஆவேசமாகி விடுகிறார் அதன் விளைவு என்ன? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை வைத்து படம் உருவாகி இருக்கிறது. இவ்வாறு பொம்மைகள் மீது மிகவும் ஆசைவுடன் இருந்து வரும் எஸ்.ஜே சூர்யா ப்ரியா பவானி சங்கரை காதலித்து வரும் நிலையில் பிரியா பவானி சங்கர் வேலை பார்க்கும் இடத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் தவறான முறையில் அணுகி வரும் நிலையில் இதனால் கோபமடைந்த பிரியா பவானி சங்கர் தனக்கு நடந்த அனைத்தையும் எஸ் ஜே சூர்யாவிடம் கூறி அழுகிறார். இதனை அடுத்து சைக்கோ போல் நடித்திருக்கும் எஸ்.ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் முதன்முறையாக கிஸ் சீனிலும் நடித்திருக்கிறார். இதோ அந்த ட்ரைலர்..