முரட்டு சிங்கிள் எஸ்.ஜே சூர்யாவின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா?

S. J. Suryah Net worth: முரட்டு சிங்கிளாக இருந்து வரும் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் எப்பொழுதும் வித்தியாசமான கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தான் எஸ்.ஜே சூர்யா. இவருடைய நடிப்பில் வெளியாகும் ஏராளமான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருந்தார் விஷாலை விட இவருடைய கேரக்டருக்கு தான் பாசிடிவ் விமர்சனம் கிடைத்தது. தற்பொழுது 55 வயதாகும் எஸ்.ஜே சூர்யா திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

காசுக்காக ரவி, ஸ்ருதியை வீட்டுக்கு அழைக்கும் விஜயா.. முத்துக்காக இறங்கி போய் பேசும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

துணை இயக்குனராக சினிமா பயணத்தை துவங்கியவர் இயக்குனர் பாண்டியராஜன், பாரதிராஜா, வசந்த் உள்ளிட்ட ஏராளமானவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்படி ஆசை, உல்லாசம் போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய இவர் அஜித் உடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக வாலி படம் இவர்களுடைய கூட்டணியில் வெளியானது.

முதல் திரைப்படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க பிறகு இயக்குவது மட்டுமல்லாமல் படங்களில் நடிப்பதையும் தொடர்ந்தார். வாலி படத்தின் வெற்றிக்காக நடிகர் அஜித் எஸ்.ஜே சூர்யாவிற்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கினார். எனவே தான் வாங்கிய முதல் படத்தின் அட்வான்சை வைத்து எஸ்.ஜே சூர்யா தன்னுடன் பணியாற்றிய துணை இயக்குனர்கள் 14 பேருக்கு பைக் வாங்கி கொடுத்த கதையும் உள்ளது.

மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா XX படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. ஹீரோவாக மட்டுமல்லாமல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் எஸ்.ஜே சூர்யா ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சேரன் திருநங்கைகளை கூட விடமாட்டார்.. ஒன்றல்ல இரண்டல்ல 120 பெண்கள்.! பிக் பாஸ் பிரபலம் பகீர் பேட்டி

அப்படி இதுவரையிலும் 20 முதல் 25 கோடி வரை ஒரு வருடத்திற்கு மட்டும் சம்பளமாக பெறுகிறாராம். சென்னையில் இவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் மற்றும் பிற இடங்களில் சொத்துக்களும் வாங்கி வைத்துள்ளார். இவருக்கு அவருடைய அக்கா செல்வி என்றால் மிகவும் பிடிக்குமாம் எனவே அவருடைய பெயரிலும் சில சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார். மேலும் BMW Z4 Roadster Melbourne Red என்ற சொகுசு காரையும், ஆடி உள்ளிட்ட ஏராளமான சொகுசுகார்களை வைத்துள்ளார். எனவே இவருடைய மொத்த சொத்து மதிப்பு 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.