வருத்தத்தில் இருந்த விஜய்.. வாய்ப்பு கொடுத்த எஸ்.ஜே சூர்யா.!

Actor Vijay: தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சமீப காலங்களாக இவருடைய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்கள் பெரும் தோல்வியினை சந்தித்துள்ளது. பொதுவாக முன்னணி நடிகரின் திரைப்படம் நன்றாக இல்லை என்றாலும் இவருக்காகவே ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று பார்த்து வருகின்றனர்.

இவர் நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் நல்ல மவுசு இருப்பதால் இவருடைய ரசிகர்கள் ஆதரித்து வந்தாலும் கதை பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி இவருடைய நடிப்பில் கடைசியாக லியோ வெளியாகி கலவை விமர்சனங்களுடன் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளருக்கு டப் கொடுக்கும் விசித்ரா ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? பலருக்கும் தெரியாத தகவல்

இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபுதேவாவிற்கு பதிலாக விஜய்யை வைத்து எடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவிற்கு வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் எஸ்.ஜே சூர்யா.

இவர் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக ஆசை திரைப்படத்தில் பணியாற்றி வந்தார். அப்பொழுது அஜித்துடன் ஏற்பட்ட பழக்கத்தினால் இவர்களுடைய கூட்டணியில் வாலி திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தினை தொடர்ந்து கல்லூரி காதல் கதையை எழுதினார் எஸ்.ஜே சூர்யா அதில் பிரபுதேவாவை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

18 வயசு இளம் மொட்டாக மாறிய சோனியா அகர்வால்.. அதுக்குன்னு எலும்பும் தோளுமாகவா..

அந்த நேரத்தில் பிரபுதேவா பிசியாக இருந்ததால் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். எனவே தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை தந்து வந்த நடிகர் விஜய் வெற்றி திரைப்படத்திற்காக காத்து வந்தார். இந்த நிலையில் தான் எஸ்.ஜே சூர்யா ஒரு நல்ல கதையோடு படம் எடுக்க காத்துக் கொண்டிருப்பதாக சிலர் விஜய்யிடம் கூற ஏற்கனவே வாலி படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அவரை அழைத்து விஜய் பேசி உள்ளார். அப்படி இவர்களுடைய கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் குஷி இப்படத்தில் பிரபுதேவா நடிக்க இருந்தது ஆனால் விஜய்யை வைத்து இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் எஸ்.ஜே சூர்யா.