18 வயசு இளம் மொட்டாக மாறிய சோனியா அகர்வால்.. அதுக்குன்னு எலும்பும் தோளுமாகவா..

Soniya Agarwal: நடிகை சோனியா அகர்வால் உடல் எடையை குறைத்து செம்ம அழகாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தனது சிறந்த நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்த சோனியா அகர்வால் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

ஒரு கட்டத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார் அந்த வகையில் தற்போது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

அட இந்த அஜித் பட நடிகை ஒரு டாக்டரா… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டங்களே…

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதன் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக கோவில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக மதுர என அடுத்தடுத்த திரைப்படங்களும் ஹிட் கொடுத்த நிலையில் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்திருந்தார்.

Soniya Agarwal
Soniya Agarwal

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது இப்படம் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தவுடன் சோனியா அகர்வால், செல்வராகவன் குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.

Soniya Agarwal
Soniya Agarwal

திருமணம் செய்துக் கொண்ட நான்கு வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். எனவே சினிமாவை விட்டு விலகிய இவருக்கு அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லும் அளவிற்கு படங்கள் ரசிகர்களை கவரவில்லை. இதனால் தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய சோனியா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி தற்பொழுது வெளியிட்டிருக்கும் இவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள். 41 வயதில் மிகவும் ஸ்லிம்மாக அழகாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் இதோ.