கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தைதான் பல ரசிகர்களின் கனவுகண்ணி.. யார் தெரியுமா.?

Actress Photo: பிரபல நடிகையின் க்யூட்டான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக யார் அந்த நடிகை என்பது குறித்த பதிவு மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் நடிகைகள் வெற்றி திரைப்படங்களை தந்து கலக்கி வந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி விடுகின்றனர்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் இவர்களுடைய மவுசும் குறைந்து விடுகிறது இது ஒரு புறம் இருந்தாலும் சில நடிகைகள் தங்களுக்கு கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் 2002ஆம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர்தான் நடிகை பூஜா குமார்.

அட இந்த அஜித் பட நடிகை ஒரு டாக்டரா… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டங்களே…

இவர் தனது அழகினாலும் நடிப்பினாலும் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது. பூஜா குமார் அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண் இவர் 1995ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தையும் வென்றார். மேலும் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற சில மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

pooja kumar
pooja kumar

சமீப காலங்களாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 என அடுத்தடுத்து கமலுக்கு ஜோடி போட்டு நடித்தார்.

pooja kumar
pooja kumar

எனவே இவர்களுக்கு இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. பிறகு தன்னுடைய காதலரை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆன இவருக்கு தற்பொழுது அழகிய பெண் குழந்தை உள்ளது. அவ்வப்பொழுது தன்னுடைய மகள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். மேலும் சிறு வயதில் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட தனது க்யூட்டான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.