அட இந்த அஜித் பட நடிகை ஒரு டாக்டரா… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டங்களே…

Ajith Kumar: அஜித்தின் ராஜா படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பங்காலி திரைப்படத்தின் மூலம் நடிப்பதை தொடங்கிய பிரியங்காவிற்கு தற்பொழுது 46 வயதாகிறது இவர் கொல்கத்தாவில் பிறந்தவர் 1997ஆம் ஆண்டு வெளியான பங்காலி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்

இதனை தொடர்ந்து ஹிந்தி, ஒடிசா, தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கும் பிரியங்கா தமிழில் 2002ஆம் ஆண்டு வெளியான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ராஜ்ஜியம் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு தல அஜித் உடல் இணைந்து ராஜா படத்தில் நடித்திருந்தார்.

raja movie
raja movie

பிரியங்காவிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தமிழில் விக்ரமின் காதல் சடுகுடு, ஐஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக 2004ஆம் ஆண்டு வெளியான ஜனனம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தற்பொழுது தமிழில் நடிக்கவில்லை என்றாலும் கனடா மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது.. சிவாஜி பேச்சை மதிக்காமல் பாதி மேக்கப்ளையே வெளியே சென்று நடிகை..

இந்த நிலையில் பிரியங்கா கடந்த 2003ஆம் ஆண்டு பிரபல கன்னட நடிகரும் இயக்குனரும் எழுத்தாளருமான உபேந்திரா அவர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்பொழுது இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மேலும் பிரியங்கா சமீப காலங்களாக டாக்டராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

dr.priyanga
dr.priyanga

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட டாக்டர் பிரியங்கா உபேந்திரா என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தனது மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது தமிழ் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு இவரை ஞாபகம் இருக்க தான் செய்கிறது.