பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளருக்கு டப் கொடுக்கும் விசித்ரா ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.? பலருக்கும் தெரியாத தகவல்

Bigg Boss 7 Vichitra Salary: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளராக இருக்கும் விசித்ரா ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விசித்ராவிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நடிகை விசித்ரா தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார் 1991ஆம் ஆண்டு பொற்கொடி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார்.

18 வயசு இளம் மொட்டாக மாறிய சோனியா அகர்வால்.. அதுக்குன்னு எலும்பும் தோளுமாகவா..

இதனை தொடர்ந்து நல்ல அறிமுக படமாக அமைந்ததால் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் சின்னத்தாயே, தலைவாசல், தேவர்மகன், ஏழாம் இடம், அமராவதி, சபாஷ் பாபு, வீரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் குணசத்திர நடிகையாக நடித்து பிரபலமான விசித்ரா சுமார் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். பொதுவாக 50 வயதை கடந்திருக்கும் பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் குறைந்த நாட்களிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது வழக்கம்.

கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தைதான் பல ரசிகர்களின் கனவுகண்ணி.. யார் தெரியுமா.?

ஆனால் ரசிகர்களின் மனதை கவர்ந்த விசித்ரா ஃபைனலிஸ்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விசித்ராவிற்கு ஒரு நாளைக்கு மட்டும் 40 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் பெறும் போட்டியாளராக விசித்ரா விளங்குகிறார்.