முன்னணி நடிகர்கள் அசிங்கப்படுத்தியதால் தன் கதைகள் தானே நடித்த 4 இயக்குனர்கள்.! அஜித் நிராகரித்ததால் எஸ்.ஜே சூர்யாவுக்கு கிடைத்த வாழ்வு..

Tamil Directors: சினிமாவில் நடிக்க விரும்பும் பிரபலங்கள் எப்படி இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அழைக்கிறார்களோ அதே போல் இயக்குனர்களும் முன்னணி நடிகர்களின் படங்களுக்காக காத்திருப்பது வழக்கம் அப்படி பல நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டும் தராத காரணத்தினால் தான் எழுதிய கதையில் தானே ஹீரோவாக நடித்த நான்கு இயக்குனர்கள் குறித்து பார்க்கலாம்.

ராம்: அப்பா மகளின் உன்னத பூர்வமான பாச கதையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த தங்க மீன்கள் படத்தினை ராம் இயக்கினார் இப்படம் 2013-ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இயக்குனர் ராம் இப்படத்தின் கதையை பல நடிகர்களிடம் கூறி உள்ளார் ஆனால் யாரும் நடிக்காத காரணத்தினால் ஒரு கட்டத்தில் தானே தங்க மீன்கள் படத்தில் ஹீரோவாக நடித்து மிரட்டினார்.

அஜித் விஜய்க்கு போட்டியாக உருவாகிறாரா சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி எத்தனை திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது தெரியுமா.!

சேரன்: 2004ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் படத்தை சேரன் எழுதி, இயக்கி, தயாரித்த உடன் நடிக்கவும் செய்தார் இப்படம் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆட்டோகிராப் படத்தின் கதையை பல முன்னணி ஹீரோக்கள் நிராகரித்ததால் ஒரு கட்டத்தில் தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார் சேரன்.

டி. ராஜேந்தர்: உயிருள்ளவரை உஷா என்ற படத்தை முழுக்க முழுக்க ரஜினிகாந்தை மனதில் வைத்து டி. ராஜேந்தர் கதை எழுத ஆனால் கடைசியில் இப்படத்தின் கதை ரஜினிக்கு பிடிக்காத காரணத்தினால் நிராகரித்துள்ளார். எனவே டி. ராஜேந்தர் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

OTT யை நம்பி படம் பண்ண கூடாது.. சும்மா இருந்த விஜய், வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுக்கிறாரா வெற்றிமாறன்.!

எஸ்.ஜே சூர்யா: எஸ்.ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமான வாலி திரைப்படத்தில் சிம்ரன், அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தினை தொடர்ந்து நியூ படத்தின் கதையை அஜித்திடம் கூற ஆனால் இதனை நிராகரித்துள்ளார் எனவே இதன் காரணத்தினால் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடித்து மிரட்டினார் இதன் மூலம் அறிமுகமான இவர் தற்பொழுது ஹீரோவாகவும் வில்லனாகவும் சினிமாவில் கலக்கி வருகிறார்.