OTT யை நம்பி படம் பண்ண கூடாது.. சும்மா இருந்த விஜய், வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுக்கிறாரா வெற்றிமாறன்.!

Director Vetrimaaran : பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் படத்திற்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த கருத்துகளை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

இதனை அடுத்து சமீபத்தில் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் குறித்து பேசி உள்ளார். அதாவது ஹாட் ஸ்டாரில் வெளியான அன்னபூரணி திரைப்படம் சில நாட்களிலேயே மீண்டும் அந்த ஓடிடி தளத்திலிருந்து எடுக்கப்பட்டது எனவே இதற்குப் பிறகு சமீபத்தில் சினிமாவில் இருக்கும் பிரச்சனை குறித்து பேசி உள்ளார்.

தமிழ் கொடுத்த ஐடியாவால் யாருக்கோ விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்ளப் போகும் அர்ஜுன்.! நாலா பக்கமும் விசாரிக்கும் போலீஸ்…

அதன்படி வெற்றிமாறன் பேசிய பொழுது, முன்பெல்லாம் திரைப்படம் என்பது திரையரங்குகளில் தரும் வெற்றியை கணக்கு பண்ணித் தான் வெளியாகும் ஆனால் இப்பொழுதெல்லாம் திரைப்படங்கள் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

5 கோடியில் ஒரு படத்தை தயாரிக்கிறார்கள் என்றால் அதில் ஓடிடி, சாட்டிலைட் மூலமாகவே அந்த ஐந்து கோடியை பெற்று விடுகின்றனர். அதற்குப் பிறகு திரையரங்களில் ஓடுவதை வைத்து தனியாக லாபம் பார்க்கின்றனர் இதனால் ஒரு வேலை படத்திற்கு ஓடிடியில் நல்ல தொகை கிடைக்கவில்லை என்றாலோ அல்லது ஓடிடி நிறுவனங்கள் வாங்க மறுத்தாலும் அந்த படம் வெளியாகுவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

பால் சொம்புடன் வந்த நடிகர்… சரக்கை மிக்ஸ் பண்ணும் மிருனாளினி ரவி.! மில்க் vs விஸ்கி வைரலாகும் புகைப்படம்

தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தினை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில் இதில் ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஓடிடி  விற்பனைக்கு பிறகு தான் திரையரங்குகளில் கோட் ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது