இந்த தீவாளிக்கு ஜிகர்தண்டா இனிப்பா ஜில்லுன்னு இருந்துச்சா…? வைரலாகும் முழு விமர்சனம்.!

jigarthanda 2 full review : தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு படத்தை எடுத்து வருபவர்கள் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ஏற்கனவே ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தை எடுத்து வெற்றி கண்டவர் இந்த நிலையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்தை  இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வந்துள்ளது.

படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா என்பதை இங்கே காணலாம். 1973 இல் கதை தொடங்க ஆரம்பிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மிகவும் பயந்த சுபாகம்  உள்ள மனிதனாக நடித்துள்ளார். எஸ் ஐ போஸ்ட் கிடைத்து இன்னும் சில நாட்களில் காவல்துறையில் சேர இருந்தார் அப்பொழுது தன் காதலியை  பார்ப்பதற்காக கல்லூரிக்கு வர அங்கு நான்கு பேரை கொன்று அந்தப் பழியை எஸ் ஜே சூர்யா மீது போட்டு விடுகிறார்கள் இதனால் எஸ்கே சூர்யா ஜெயிலுக்கு போகிறார்.

அந்த சமயத்தில் உச்ச நடிகராக இருக்கும் ஒருவர் அரசியலிலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் தான் போட்டி அரசியல்வாதியை எப்படியாவது சாய்த்தால்தான் தனக்கு சி.எம் பதவி கிடைக்கும் என எண்ணி அதற்கு முக்கியமாக ராகவா லாரன்ஸ்சை போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு சினிமா ஆசை இருப்பதை அறிந்து ராகவா லாரன்ஸை நெருக்கமாக பழக ஆரம்பிக்கிறார் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.

ராகவா லாரன்ஸ் இதனால் வரை கத்தி கத்தி தான் நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் தன்னுடைய அசால்டான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். என்னதான் பயந்த கதாபாத்திரமாக நடித்திருந்தாலும் பயத்தை உள்ளே வைத்துக் கொண்டு கம்பீரமாக லாரன்ஸ் இடம் பேசும் எஸ் ஜே சூர்யா திரையரங்கில் ஸ்கோர் செய்துவிட்டார். கூடிய சீக்கிரம் கருப்பு ஹீரோ உங்களை வந்து ஓட விடுவான் என ரஜினி சினிமாவில் வந்த வருடத்தில் ரஜினியின் அபூர்வராகங்கள் என்று ரெஸ்பான்ஸ் என கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஸ்டைலை ஆங்காங்கே பதித்துள்ளார்.

முதல் பாதி முழுவதும் எஸ் ஜே சூர்யா லாரன்சை கொள்ளுவாரா மாட்டாரா என அனைவரும் எதிர்பார்க்க இடைவெளியில் எல்லோரும் ஒரு இடத்தில் மாட்டிக் கொள்ள அங்கு நடக்கும் காட்சிதான் பரபரப்பின் உச்சம் இப்படி இரண்டாம் பாதியில் மலைவாழ் மக்கள் அவர்களின் வாழ்வாதாரம் அரசாங்கத்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி திசை திரும்புகிறது என கார்த்திக் சுப்புராஜ் மிகவும் அழகாக காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் யானைகளை பிடிக்கும் காட்சிகள் எல்லாம் மிகவும் பிரம்மாண்டம் அதே நேரத்தில் ஜிகர்தண்டா திரைப்படத்தில் முதல் பாதி விறுவிறுப்புடன் இருக்கும்படியும் இரண்டாவது பாதி சிந்திக்கும் படியும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ் முதல் பாகத்தில் ஒரு கேங்ஸ்டர் எப்படி நடிகன் ஆகிறான் என்பதையும் இரண்டாவது பாகத்தில் ஒரு கேங் ஸ்டார் மக்கள் நாயகன் ஆகிறான் அதற்கு சினிமா எவ்வளவு உதவி செய்கிறது என்பதுதான் படத்தின் மையக்கரு.

படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் பாடத்தின் கதைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளதால் படத்தின் நீளத்தை குறைக்க முடியாததால் மூன்று மணி நேரம் படத்தை பார்க்கும் படி கார்த்திக் சுப்புராஜ் அமைத்துள்ளார். ஜிகர்தண்டா ரசிகர்களின் தீபாவளி ஸ்வீட்…