ஜிகர்தண்டா முதல் ஆளாக இறங்கி விமர்சனம் செய்த தனுஷ்.! பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.!

Jigarthanda DoubleX : எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கி உள்ளார். அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கு முதல் ஆளாக தனுஷ் தன்னுடைய twitter பக்கத்தில் விமர்சனம்  கொடுத்துள்ளார் இதனை ப்ளூ   சட்டை மாறன் மரணமாய் கலாய்த்து உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகிய திரைப்படம் ஜிகர்தண்டா இந்த திரைப்படம் தீபாவளி தின ஸ்பெஷலாக இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும். பொதுவாக கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வரும் அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

சிங்கம் களம் இறங்கிடுச்சு.. மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிய கேப்டன் விஜயகாந்த்.! ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்

அதிலும் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து நடித்திருப்பதால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் ஏனென்றால் எஸ் ஜே சூர்யா கடைசியாக நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது வசூல் ரீதியாகவும் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது அதனால் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு இந்த திரைப்படத்தில் பிரமாதமாக இருக்கும் என ரசிகர்கள் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகியது அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று உருவாக்கியுள்ளார்கள் ஜிகர்தண்டா முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிரட்டலாக இருக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் மலையாள நட்சத்திரம் சைன் டாம் சக்கோ நிமிஷா சஜயனும் படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார். மேலும் ஜிகர்தண்டா திரைப்படத்தை தனுஷ் அவர்களுக்கு தனியாக போட்டு காட்டியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ் படத்தை பார்த்த தனுஷ் தன்னுடைய விமர்சனத்தை கொடுத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் இருவரும் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை கொடுத்தார்கள்.

உண்மையை வெளிப்படுத்தி கையெழுத்து போடுவதை தடுத்து நிறுத்திய தமிழ்.! உன்ன போய் நம்புனனே அர்ஜுன்.. நீயா இப்படி பண்ணுனது கடுங்கோபத்தில் ராகினி.!

ஆனால் இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு திரையரங்கில் வராமல் நேரடியாக OTT இணையதளத்திற்கு வெளியானது ரசிகர்கள் எதிர்பார்ப்பை அந்த திரைப்படம் பூர்த்தி செய்யாததால் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஜிகர்தண்டா இரண்டாவது பாகத்தைப் பார்த்த தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் மேக்கிங், எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ், ஆகியோர் நடிப்பு என அனைத்தையும் பாராட்டியுள்ளார் அதிலும் கடைசியாக 40 நிமிடம்   மனதில் பதிந்து விடுகிறது எனக் கூறியுள்ளார்.

தனுஷ் ஜிகர்தண்டா திரைப்படத்திற்கு பாசிட்டி விமர்சனம் கொடுத்துள்ளதால் இதனை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அந்த மொத்த விமர்சனத்தையும் சல்லி சள்ளியாக நோருகியுள்ளார் படத்தில் 40 நிமிடம் சூப்பர் என்றால் மீதி படம் எப்படி என கேள்வி எழுப்பி உள்ளார் இந்த கேள்வி நியாயமானது என பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

dhanush review for jigarthanda-double-x-review
dhanush review for jigarthanda-double-x-review