manju-warrier-1

பல லட்சம் மதிப்புள்ள சூப்பர் பைக்கை வாங்கிய மஞ்சு வாரியர்.! வைரலாகும் வீடியோ..

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

இந்த படத்தில் இவருடைய கேரக்டர் பாராட்டப்பட்ட நிலையில் இந்த படத்தினை அடுத்து அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு திரைப்படத்தில் கண்மணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த படத்தில் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரகனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இதனை அடுத்து இந்த படம் தற்பொழுது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள நிலையில் இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் உலகெங்கும் பல நாடுகளில் துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை பெற்றுள்ளது.

manju warrier
manju warrier

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலை உயர்ந்த BMW பைக் வாங்கி உள்ள நிலையில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். BMW R1250 GS மாடலைச் சேர்ந்த பைக்கை தான் மஞ்சு வாரியர் வாங்கியுள்ளார். இந்த பைக் கொச்சியில் 26 லட்ச ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது அந்த வகையில் மஞ்சு வாரியரும் கொச்சி BMW ஷோ ரூமில் வாங்கியுள்ளார்.

26 லட்சம் மதிப்புள்ள இந்த பைக்கில் பல பெசிலிட்டிஸ் இருந்து வருகிறது அதாவது 21 கிலோமீட்டர் மைலேஜ் தரக்கூடியது. 250 கிலோ எடையுள்ள இந்த சூப்பர் பைக் 1254 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது மேலும் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும், 20 லிட்டர் வரை பெட்ரோல் கொள்ளளவு கொள்ள கொண்டது.