ராதையின் கண்ணனாக மாறி ரொமான்ஸ்சில் கலக்கும் பிரபல நடிகை மஞ்சு வாரியர்.!

0
manju-warrier-3
manju-warrier-3

சமீப காலங்களாக அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து தங்களுடைய அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பலர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவில் நாள்தோறும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கண்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பல வருடங்களாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் மஞ்சுவாரியார்.

இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது மேலும் குறிப்பாக துணிவு திரைப்படத்தில் மஞ்சுவாரியாரின் அதிரடி ஆக்சன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மஞ்சு வாரியாரை இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் பேர் பின்பற்றி வருகின்றனர்.

manju warrier 1
manju warrier 1

எனவே இவருடைய ரசிகர்களை திருப்தி பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது மஞ்சு வாரியார் ராதையின் கிருஷ்ணனாக மாறி ராதை உடன் ரொமான்ஸ் செய்துள்ளார் அந்த புகைப்படங்கள் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.

manju warrier
manju warrier

மஞ்சு வாரியார் சினிமாவில் பிரபல நடிகை என்பதை தாண்டி அவர் நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் உடயவர் அந்த வகையில் பரதநாட்டிய கலைஞராக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் கண்ணன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் நடிகை மஞ்சுவாரியார் தற்பொழுது மலையாளம், அரபு மொழிகளில் உருவாகி வரும் நான்குக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

manju warrier 2
manju warrier 2