கல்யாணம் ஆனா என்ன எங்களுக்கு மவுஸ் குறையவே குறையாது.! இன்னும் கல்லாபெட்டியை நிரப்பும் 5 நடிகைகள்.

Tamil Actresses: நடிகைகளை பொறுத்தவரை திருமணமாகும் வரை மட்டும்தான் தொடர்ந்து படங்களில் நடித்து தங்களுடைய மார்க்கெட் குறையாமல் முன்னணி நடிகையாக வலம் வர முடியும் எனக் கூறப்படுகிறது ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என திருமணத்திற்கு பிறகும் அதே அந்தஸ்துடன் சினிமாவில் கலக்கி வரும் டாப் 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

நஸ்ரியா: தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் குடும்ப குத்து விளக்காக ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கும் நஸ்ரியா பிரபல முன்னணி நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார். திருமணமான நான்கு வருடங்கள் பிரேக் எடுத்துக் கொண்ட இவர் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என நடித்து வருகிறார்.

தமிழ் கொடுத்த ஐடியாவால் யாருக்கோ விரித்த வலையில் தானே சிக்கிக் கொள்ளப் போகும் அர்ஜுன்.! நாலா பக்கமும் விசாரிக்கும் போலீஸ்…

மஞ்சு வாரியர்: தமிழ்நாட்டில் பிறந்த மஞ்சு வாரியார் மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், சிங்கர் என பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குகிறார்.

ஜோதிகா: நடிகை ஜோதிகா 2006ஆம் ஆண்டு சூர்யாவை காதலித்து பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு 9 வருடங்கள் பிரேக் எடுத்துக் கொண்ட இவர் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமந்தா: நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சமந்தா தனது திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்தார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர் இவ்வாறு இந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளார்.

பிரபு தேவாவை சினிமாவில் தூக்கி விட்ட காதலன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

நயன்தாரா: சினிமாவில் நல்ல முன்னேற்றத்தை சந்தித்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நயன்தாரா பிறகு இயக்குனர் விக்னேஷ் திருமணம் செய்துக் கொண்டதற்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார். இவர் ஹீரோயினாக நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியினை சந்தித்து வந்தாலும் தொழிலில் கில்லியாக உள்ளார்.