பிரபு தேவாவை சினிமாவில் தூக்கி விட்ட காதலன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

kadhalan : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர் இவர் இயக்கத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது அதேபோல் சங்கர் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போடுவார்கள்.

இவர் தன்னுடைய படத்தில் ஏதாவது ஒரு பிரம்மாண்டத்தை காட்டி விடுவார் அப்படிதான் சங்கர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் காதலன் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா நக்மா வடிவேலு ரகுவரன் எஸ் பி பாலசுப்ரமணியம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

ஆசை மகனின் பிறந்த நாளை அயல்நாட்டில் கொண்டாடிய இயக்குனர் அட்லி.! வைரலாகும் புகைப்படம்

இந்த திரைப்படத்தை கேடி குஞ்சுமோன்  தயாரித்திருந்தார் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞன் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பார் கடைசியில் இருவரும் இணைவார்களா மாட்டார்களா என்பது தான் திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார் அதேபோல் காதலன் திரைப்படத்தில் அசத்தலான பாடல்கள் உருவாகியிருந்தது இன்றளவும் இந்த பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த வகையில் பிரபு தேவா நடித்த காதலன் திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் தான் அந்த நேரத்தில் பிரசாந்த் படு பிஸியாக இருந்ததால் பிரபுதேவா இந்த திரைப்படத்தில் நடித்தார்.

முத்த காட்சிகள் வைங்க என சொல்லும் இந்த காலத்தில் லிப் லாக் சீன் வேண்டாம் என மறுத்த 5 நடிகர்கள்..

அதேபோல் அவருக்கு டப்பிங் கொடுத்தது விக்ரம் அது மட்டும் இல்லாமல் நாயகியாக மாதிரி தீக்ஷித் இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அவரும் பிசியாக இருந்ததால் பிறகு நக்மாவை நடிக்க வைத்தார்கள்.