கோலாகலமாக நடந்து முடிந்த “தலைவர் 170” பூஜை.. கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள்

Thalaivar 170 poojai photos :  தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளி வெற்றி கண்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரஜினி கைவசம் லால் சலாம், தலைவர் 170 மற்றும் தலைவர் 171 ஆகிய படங்கள் இருக்கின்றன. தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் அவருக்கு பெரிய அளவு காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அடுத்தது தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கி வெற்றிகண்ட டிஜே ஞானவேல் இயக்க லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டச் பொருள் செலவில் தயாரிக்கிறது.  படத்திற்கான நடிகர், நடிகைகளை பற்றி நேற்று விலாவாரியாக வெளியிட்டது அதன்படி மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா டகுபதி..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளதாக கூறிய நிலையில் இன்று தலைவர் 170 படக்குழு பூஜையை போட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பூஜையை தொடங்கியது இதில் சூப்பர்ஸ்டார் ரஜினி, இயக்குனர் டி ஜே ஞானவேல், நடிகை மஞ்சு வாரியர் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினி குத்துவிளக்கை ஏற்றினார் அதன் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. பூஜையை தொடர்ந்து சூட்டிங் சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இதோ தலைவர் 170 படத்தின் பூஜை புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

thalaivar 170
thalaivar 170
thalaivar 170
thalaivar 170