bigg-boss-6

நயன்தாரா மாதிரி இருக்கீங்க என மைனாவை பங்கு படுத்திய விஜே பார்வதி மற்றும் ஷோபனா.! புதிய வருகையால் பதட்டத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 90 நாட்களைக் கடந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்ச்சி முடியயிருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் அனைத்து போட்டியாளர்களும் கிராண்ட் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தங்களுடைய கடின உழைப்பை செலுத்தி வருகிறார்கள்.

மேலும் கடினமான டாஸ்க்களும் நடைபெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் அமுதவாணன் வெற்றி பெற்ற நிலையில் கிராண்ட் பினாலேவிற்கு நேரடியாக முதல் போட்டியாளராக சென்று இருக்கிறார். இவ்வாறு இந்த போட்டியில் தன்னுடைய சிறந்த விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரம் எதிர்பாராத வகையில் ரட்சிதா மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார். 91 நாட்கள் வரையிலும் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த ரட்சிதா மகாலட்சுமி ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் இந்த வாரம் இரண்டு நாமினேஷன் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் அறிமுகமாகி வருகிறார்கள். அதாவது நேற்று இந்நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தா என்ட்ரி கொடுத்த நிலையில் அனைத்து போட்டியாளர்களையும் வச்சு செய்தார் இதனை அடுத்து தற்பொழுது மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த வேண்டும் என விஜேவாக பணியாற்றி வரும் விஜே பார்வதி மற்றும் விஜே ஷோபனாவை சிறப்பு விருந்தினர்களாக சென்றுள்ளனர்.

அப்பொழுது மைனாவிடம் பார்வதி நீங்கள் வீட்டில் என்ன செய்கிறீர்கள் உங்கள் காமெடிகளுக்கு மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா என்றும் நான் பாட்டுக்கு இருக்கிறேன் டைட்டில் வின் பண்ணனும் என்ற எண்ணம் இல்லையா என்று கடுப்பாக கேட்கிறார் இதனை அடுத்து மைனா நயன்தாரா மாதிரி இருக்கிறார் தானே என்று ஷோபனாவும் மிகவும் பங்கமாக கலாய்த்துள்ளார்.